மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் தாகனு என்ற இடத்தில், 40 பள்ளி குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்தது. இதனையடுத்து கடலோர காவல் படை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டன. டோர்னியர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 35 பள்ளி குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேர் மாயமாகியுள்ளனர். படகில் சென்ற குழந்தைகளுக்கு உயிர்காக்கும் கவசம் எதுவும் அணியவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.