தற்கொலைக்கு கந்துவட்டி காரணமில்லை: போலீஸ் விளக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலைக்கு கந்துவட்டி காரணமில்லை: போலீஸ் விளக்கம்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (47)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தற்கொலைக்கு கந்துவட்டி காரணமில்லை: போலீஸ் விளக்கம்

சென்னை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு இசக்கி முத்து என்பவர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கத்துவட்டி கொடுமையால் நடந்த இந்த தற்கொலை தமிழகத்தையே உலுக்கி போட்டது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் இசக்கிமுத்துவின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்குமாறு நெல்லை மாநகர கமிஷ்னரிடம் மனு செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் அளித்துள்ள பதிலில், கடன் கொடுத்தவர்களோ, காவல்துறையினரோ இசக்கிமுத்துவை மிரட்டவில்லை. பல நபர்களிடம் கடனாக பெற்ற பணத்தை திரும்பக் கொடுக்க மனமில்லாததாலும், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிமுத்து கடன் கொடுத்தவர்கள் மீது புகார் அளித்ததாக கூறப்பட்டுள்ளது. கந்துவட்டி காரணம் இல்லை எனவும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டதாலேயே இசக்கிமுத்து தற்கொலை செய்துகொண்டதாக அந்த அறிக்கையில் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-ஜன-201813:21:11 IST Report Abuse
Sanny எனக்கு என்னமோ, அந்த ஊரு போலிசும் கந்துவட்டிக்காரனிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருப்பார்கள் போல தெரியுது. பெருசா கண்டுபிடித்துவிட்டாங்க, தற்கொலைக்கான காரணத்தை, ஒரு அவார்டு பார்சல்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
14-ஜன-201812:14:37 IST Report Abuse
தமிழ்வேள் தற்கொலை செய்துகொண்டவன், திருநெல்வேலியில் கந்துவட்டிக்கு கடன்வாங்கி, அதை திருப்பூரில் கந்துவட்டிக்கு விட்டு காசு பார்த்தவன். திருப்பூரில் வசூல் சரியில்லாததால், இவன் மாட்டிக்கொண்டான். அவ்வளவுதான் விஷயம். செத்தவனும் ஒழுங்காக தொழில் செய்தவன் அல்ல. பிறகு ஏன் இவ்வளவு கூப்பாடு?? இவனிடம் தொகையை திரும்பக்கேட்டது தவறு என்றால், இவன் கந்துவட்டிக்கு கடன் கொடுத்தது மட்டும் நியாயமா? இவன் திருப்பூரில் என்ன அட்டகாசம் செய்தான் என்று யாருக்கு தெரியும்? இவன் மீது புகார் சொல்லி இவனிடம் கந்துவட்டிக்கு கடன்வாங்கியவன் எவனாவது தீக்குளித்திருந்தாலும் போலீஸ் இப்படித்தான் சொல்லியிருக்கும். கடன் வாங்குபவனுக்கு அறிவு எங்கே போனது???
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201813:18:48 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ எதனால், அந்த பய ரெண்டு முணுத்தடவ புகார் கொடுத்தும் அவனை கூப்பிட்டு கூட விசாரிக்கல ? அப்போவே கூப்பிட்டு ரெண்டு தட்டு தட்டி சரி பண்ணி இருக்கலாமே... இப்போ பொதுவா உள்ள பிரச்சனைகள் என்னவென்றால்... அரசியல் வியாதிகளும், அதோடு காவல்துறையும் சேர்ந்து கொண்டு இந்த சிஸ்டத்தில் பணம் கொழிக்கின்றார்கள்... இதை பொறுத்துதான், இங்கு வெளியிடுவோரின் கருத்தும் இருக்கும். .......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201813:20:39 IST Report Abuse
தமிழ்வேல் "கடன் வாங்குபவனுக்கு அறிவு எங்கே போனது" இதை மட்டும் ஏற்றுக் கொள்கின்றேன்....
Rate this:
Share this comment
14-ஜன-201813:36:04 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்படத்துக்கேத்த கருத்தா இல்லையே நைனா......
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201811:23:06 IST Report Abuse
rajesh இது தான் தமிழ் நாடு
Rate this:
Share this comment
14-ஜன-201813:35:17 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்அத்து ஐலைட் இல்லே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X