8 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வியூகம்! Dinamalar
பதிவு செய்த நாள் :
வியூகம்!
8 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற...
இளம் வாக்காளர்களை கவர பா.ஜ., திட்டம்

புதுடில்லி : இந்த ஆண்டு நடக்கவுள்ள, எட்டு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பு மற்றும் அதற்கான வியூகம் வகுத்தல் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடியின் இல்லத்தில் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்தல்களில், முதல் முறையாக ஓட்டளிக்கவுள்ள, இளம் வாக்காளர்களை கவரும் வகையிலான, புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

8 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வியூகம்!

கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., மேகாலயா, திரிபுரா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய, எட்டு மாநிலங்களில், இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, தற்போதைய நிலையில், மொத்தம், 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.

எதிர் வரும் தேர்தல்களில், ஏற்கனவே ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், பிற மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பிலும், பா.ஜ., தலைமை பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில், சமீபத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு விருந்தளிக்கப்பட்டது. அப்போது, தேர்தல் வியூகம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் எதிர்காலம், இளைஞர்கள் கையில் உள்ளது என்பதை, பிரதமர் மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

குறிப்பாக, இந்த ஆண்டு, 18 வயது நிறைவடைவோர், எதிர் வரும் சட்டசபை மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும், லோக்சபா தேர்தல்களில் ஓட்டளிக்க உள்ளனர்.
கடந்த, 2000ம் ஆண்டில் பிறந்தோர், 'மில்லேனியம் வாக்காளர்கள்' என அழைக்கப்படுகின்றனர். மில்லேனியம் வாக்காளர் களை கவரும் வகையில், புதிய சிந்தனைகள், புதிய கருத்துகள்அடங்கிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என, பிரதமர் மோடி விரும்புகிறார்.
அவர் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்தந்த மாநிலங்களில் நிலவும் பிரச்னைகள், தேவைகள் மற்றும் மாநில அரசின் நிறை குறைகள் பட்டிலிடப்பட்டுள்ளன. ஓட்டு கேட்டு மக்களை சந்திக்கும் போது, அவர்கள், பா.ஜ.,வினரை பார்த்து அதிருப்தி அடையாத வகையில், தற்போதிருந்தே செயல்பாடுகளை மேம்படுத்ததிட்டமிடப்பட்டுள்ளன.

பா.ஜ., ஆளும் மாநிலங்களில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விரைந்து முடிப்பதோடு, அரசின் சாதனைகளை, மக்கள் மத்தியில் எடுத்துரைக்க சிறப்பு ஏற்பாடுகள்செய்யப்படவுள்ளன.

பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளும் கட்சியின் குறைபாடுகள் மற்றும் மாநில மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான திட்டங்கள் குறித்த அறிக்கைகளை தயாரிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

Advertisement

விருந்தில் பங்கேற்றவர்கள்?
பிரதமர் மோடி அளித்த விருந்தில், கட்சித் தலைவர் அமித் ஷா, கட்சியின் மூத்த நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், கட்சியின் பொதுச் செயலர்கள், முரளிதர ராவ், கைலாஷ் விஜயராகவையா, சரோஜ் பாண்டே, ராம் மாதவ், புபேந்திர யாதவ், அனில் ஜெயின், அருண் சிங் மற்றும் தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும்பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இளைஞர் படைக்கு வாய்ப்பு

எதிர் வரும், எட்டு மாநில சட்டசபை தேர்தல்கள், 2019 லோக்சபா தேர்தலில், இளம் வாக்காளர்களின் ஓட்டுகளே, தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் என, பா.ஜ., மிக திடமாக நம்புகிறது. எனவே, அவர்களை கவரும் வகையில், பா.ஜ., ஆட்சியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் பொறுப்பு, கட்சியின் இளைஞர் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பா.ஜ., யுவா மோர்சா, கட்சியின் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட அமைப்புகள், கல்லுாரி மாணவர்களிடையே, பா.ஜ., ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக, புதிய, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய வாக்காளர்கள், தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவுவதோடு, அவர்களில் பலரை கட்சியில் சேர்க்கும் பணியிலும், பா.ஜ., நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201821:57:35 IST Report Abuse

Mani . Vமின்னணு வாக்கு பதிவு இயந்திரம் உபயோகப்படுத்தினால், எட்டு மாநிலம் இல்லை பக்கத்து நாட்டு தேர்தலில் கூட நாம் வெற்றி பெற்று விடலாம் ஜி.

Rate this:
PADMANABHAN R - Chennai,இந்தியா
14-ஜன-201820:07:03 IST Report Abuse

PADMANABHAN Rஏழை மக்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். முதலில் விலைவாசியை குறைக்க வழி பாருங்கள். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டால் விலை வாசி குறைய வழியுண்டு. உங்களின் சீர் திருத்தங்கள் ஏழைகளுக்கு புரியாது. அடுத்து வருகின்ற பொது தேர்தலில் (2019) B.J.P ஜெயிக்கவேண்டும் என்றால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றையாவது செயல்படுத்த முனையவேண்டும். நானும் B.J.P. ஆதரவாளன். மிகவும் பிடித்த தலைவர் திரு.மோடி அவர்கள். ஆனால் காங்கிரஸ் கொள்கைகளையும் திடங்களையும் B.J.P. யும் தொடரும்ப்ளழுது நமக்கே ஒரு சலிப்பு வருகிறது. தமிழ்நாட்டிற்கென்று ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் கடந்த ஆட்சியை சேர்ந்த நாராயணசாமி போல விமானநிலையத்தில் பேட்டி மட்டுமே கொடுக்கிறார். நங்கள் மிகவும் எதிர்பார்த்தது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி குறைக்கப்படும் என்று. இதுகூட அவர்களின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது தான். ஆனால் சுங்கவரி அதிகரிக்கப்படும்பொழுது கோபம் வருவது இயற்கைதானே. சுங்கவரி ஏற்றப்படும்பொழுது விலை வாசி எப்படி குறையும். தமிழ்நாட்டில் ஒரு அரசு செயல்படுவதாகவே நாங்கள் நினைக்கவில்லை. அரசுகள் திருந்தாவிட்டால் மக்கள் திருத்தி விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Rate this:
krishnan - Chennai,இந்தியா
14-ஜன-201817:16:12 IST Report Abuse

krishnanBJP இப்போது சத்தம் இல்லாமல் இருக்கிறது . அவர்கள் ஏற்படுத்திய திட்டம் எல்லாம் அவர்களுக்கு அடியை வாங்கி கொடுத்தது.

Rate this:
hasan - tamilnadu,இந்தியா
14-ஜன-201815:00:20 IST Report Abuse

hasanபாகிஸ்தான் காரனுடன் சேர்ந்து கொண்டு மன்மோகன் என்னை கொல்ல சதி செய்கிறார் என்று நீலி கண்ணீர் வடித்தால் மக்கள் நம்பி ஓட்டு போட்டுவிடுவார்கள் தவிர ஒட்டு மெச்சினே நம்ம இஷ்டப்படி தானே வேலை செய்கிறது , கவலையை விடுங்க ,

Rate this:
14-ஜன-201817:39:31 IST Report Abuse

SathyanarayananSathyasekarenkonjamavathu, masatchiyoda, unaku sorupoduura nattukaga yosinga, scam panni natta kollai adikiravanu, avan ramjan appa kulla potu vantha nikirannu support panna thenga. pidikilaya, 1947 la renda pirichinga illa, ange odi poyirunga....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜன-201813:55:57 IST Report Abuse

balakrishnan8 மாநில தேர்தலை விட 2019 பொது தேர்தல் தான் முக்கியம், மாநில தேர்தல்களில் அமீத் ஷா தன்னுடைய வித்தைகளை காப்பாற்ற வழி கிடைக்கும், பொது தேர்தல்களில் மக்கள் தங்கள் வித்தைகளை காட்ட தயாராக இருக்கிறார்கள்,

Rate this:
MAN - CHENNAI,இந்தியா
14-ஜன-201811:53:12 IST Report Abuse

MANDai evanda antha thesa nesan aprum mayiru nesan nu. Thevai illamal bible patri illa christians patri pesa the..un kedu ketta sinthanaikalukku appaarpathu engal mathamum makkalum... Unnai ponra vakkira puththi ullavanukalukku athu puriyathu... Yaravuthu christians ungalai patri pesurangala? Neenga ya engalaye pesi pesi saagureenga.

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
14-ஜன-201808:50:49 IST Report Abuse

 ஈரோடுசிவாஆக மொத்தம் ... இத்தாலி மாஃபியா கும்பலை நாட்டைவிட்டேத் துரத்த வேண்டும் ...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜன-201813:57:29 IST Report Abuse

balakrishnanஇன்னும் விரட்ட முடியலையா, என்ன ஒரு கேவலம், நாலு வருஷம் ஆட்சியில் இருந்தும், ஒன்னும் செய்யமுடியவில்லையா...

Rate this:
Jesudass Sathiyan - Doha,கத்தார்
14-ஜன-201807:54:16 IST Report Abuse

Jesudass SathiyanEVM இருக்க பயமேன்?

Rate this:
sridhar - Chennai,இந்தியா
14-ஜன-201812:39:37 IST Report Abuse

sridharJesudoss, கத்தோலிக்க சோனியா இருக்க பயமேன் என்று ஒரு காலத்தில் நீங்கள் இல்லையா. நாடு முழுதும் fraud ngo மூலம் மத வியாபாரம் செய்யவில்லையா....

Rate this:
14-ஜன-201813:07:30 IST Report Abuse

பாலாஇந்த பல்லவியை மாற்றினால் தான் உங்களுக்கு சுயபரிசோதனை செய்யும் எண்ணமே பிறக்கும்....

Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201813:54:28 IST Report Abuse

Swaminathan Nathசிந்திக்கவும், தினகரன் எப்படி ஜெயித்தார்???????...

Rate this:
vns - Delhi,இந்தியா
14-ஜன-201807:44:11 IST Report Abuse

vnsBJP தமிழகத்திலும் வளர வாழ்த்துக்கள்.. த்ராவிஷங்களுக்கு ஆட்சி என்றால் என்னவென்று கூற பிஜேபி தமிழகத்தில் ஆட்சி செய்ய வேண்டும்.

Rate this:
Anandan - chennai,இந்தியா
14-ஜன-201809:06:47 IST Report Abuse

Anandanஎண்ணூரில் எண்ணையை அள்ளிய லட்சணம், காவேரி ஆணையம் அமைக்க முடியாதுனு சொல்லி தமிழ்நாடு முதுகில் குத்தியது, இதுவரை விவசாயிகளை சந்திக்காதது, ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றிய லட்சணம், அந்த புயல் பற்றி எச்சரிக்கை கொடுக்காதது இவைகள் தான் விஷம். இதுதான் ஆட்சி செய்யும் லட்சணமா? வந்துட்டாங்க, ஆட்சி பண்ணும் லட்சணம் பற்றி சொல்ல....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201817:44:55 IST Report Abuse

Kasimani Baskaran"எண்ணூரில் எண்ணையை அள்ளிய லட்சணம்" - எதிரிக்கட்சிதானே... களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியதுதானே? காங்கிரஸ் உறவு புட்டுக்கொண்டால் திமுக எழுந்திருக்கவே முடியாதாம்......

Rate this:
Anandan - chennai,இந்தியா
14-ஜன-201821:34:12 IST Report Abuse

Anandanஆட்சி செய்ய துப்பில்லைனா எதுக்கு ஆளும் கட்சி. காசிமணி தம்பி, எண்ணூரில் எண்ணையை அள்ள வேண்டியது மத்திய அரசு அந்த சின்ன விஷயம் கூட தெரியாத சின்ன புல்லப்ப நீ. நடிகனின் வாலை பிடிக்கும் கட்சி அடுத்த கட்சி பத்தி பேச துப்பில்லை....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஜன-201806:37:31 IST Report Abuse

தேச நேசன் ஒரு வியூகமும் வேண்டாம் மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பிஷப்புக்கள் தான்(முக்கியமாக பாப்டிஸ்ட் சர்ச்) அரசையே உருவாக்கி கட்டுப்படுத்துகிறார்கள் அவர்களை மீறி நடந்தால் பிரிவினைவாத பயங்கரவாதிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும் காங்கிரஸோ வழக்கம்போல (தற்காலிக சிவபக்தர் வேடத்தை களைத்துவிட்டு_ பைபிள்படி அரசை நடத்துவோம்னு தேர்தல் அறிக்கைவிடும் திரிபுராவிலோ பாஜக வெற்றிக்கு இடதுசாரிகள் பாடுபடுகிறார்கள் . இவற்றுக்கு அடங்காத சாதாரண மக்களோ புத்திசாலிகள் . வருமானம் அவ்வளவாக இல்லாமல் மத்திய அரசின் மானியங்களை நம்பியிருப்பதால அவ்வப்போது இருக்கும் மத்திய ஆளும்கட்சி பக்கமே சாய்வர் ஆகமொத்தம் வடகிழக்கு அரசியல் ஜனநாயகத்துக்கே சம்பந்தமில்லாதது

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement