இந்திய பவுலர்கள் எழுச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய பவுலர்கள் எழுச்சி

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

செஞ்சூரியன்: இரண்டாவது டெஸ்டில் மார்க்ரம், ஆம்லா அரைசதம் கடந்து கைகொடுக்க, முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்ட், செஞ்சூரியனில் இன்று துவங்கியது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா, துவக்க வீரர் ஷிகர் தவான், வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு பார்த்திவ் படேல், லோகேஷ் ராகுல், இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டனர்.
இப்போட்டியிலும் ரகானேவுக்கு இடம் கிடைக்கவில்லை. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம், டீன் எல்கர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த மார்க்ரம், அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்திருந்த போது, அஷ்வின் 'சுழலில்' எல்கர் (31) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய மார்க்ரம் (94) சதமடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். மறுமுனையில் அசத்திய ஆம்லா (82) தன்பங்கிற்கு அரைசதமடித்தார்.

டிவிலியர்ஸ் (20) நிலைக்கவில்லை. குயின்டன் டி காக், பிலாண்டர் 'டக்-அவுட்' ஆனார்கள்.முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் டுபிளசி (25), கேஷவ் மகராஜ் (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின் 3, இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை