சேவல் சண்டை போட்டி: உச்ச நீதிமன்றம் அனுமதி Dinamalar
பதிவு செய்த நாள் :
சேவல் சண்டை போட்டி:
உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி : 'சேவல் சண்டை போட்டிகளை, அவற்றின் கால்களில், கத்தி, பிளேடு கட்டாமலும், பந்தயம் கட்டி சூதாடாமலும் நடத்தலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Supreme Court,உச்ச நீதிமன்றம்


இடைக்கால உத்தரவு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும், பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளின் போது, சேவல் சண்டை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, 2017ல் தொடரப்பட்ட வழக்கில், சேவல் போட்டி நடத்த அனுமதி அளித்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் ஆந்திராவில், இந்தாண்டு சங்கராந்தி பண்டிகையின் போது, சேவல் சண்டை போட்டி நடத்த, ஆந்திர உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சேவல் சண்டை போட்டி நடத்துவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, மாநில போலீசாருக்கு நீதிமன்றம்உத்தரவிட்டு உள்ளது.

உத்தரவு


இதையடுத்து, மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில், போலீசார், 144 தடையுத்தரவு பிறப்பித்து உள்ளனர். சேவல் சண்டை என்ற பெயரில், பெரியளவில் சூதாட்டம் நடத்தக்கூடும் என்ற யூகத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர், கனுமுரி ராமகிருஷ்ணம் ராஜு, உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'சேவல் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என, கோரி உள்ளார்.
இம்மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு: சேவல் சண்டை போட்டிகளை, பாரம்பரிய முறையில் நடத்தலாம்.

Advertisement

கடந்தாண்டு, சேவல் சண்டை போட்டிக்கு அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு, இன்னும் அமலில் உள்ளது.

சூதாட்டம்


சேவல் சண்டை போட்டிகள் நடத்தும் போது, அவற்றின் கால்களில், பிளேடு அல்லது கத்தி கட்டக் கூடாது. இப்போட்டிகளின் போது, சூதாட்டங்களில் ஈடுபடக் கூடாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும், ஆந்திர உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201802:42:26 IST Report Abuse

தமிழ்வேல் எங்க தெருவுல அன்னாடம் நாய் சண்டைங்க நடக்குது மைலார்டு.. அதுக்கு ஒரு தடை போடாக கூடாதா ?

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜன-201814:04:12 IST Report Abuse

Nallavan Nallavanபீட்டா -வுக்குத் தகவல் கொடுங்க பாஸ் .......

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement