ஆண்டாள் குறித்து அவதூறு: வைரமுத்து மீது வழக்குப்பதிவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆண்டாள் குறித்து அவதூறு:
வைரமுத்து மீது வழக்குப்பதிவு

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசிய, கவிஞர் வைரமுத்து மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

ஆண்டாள் குறித்து அவதூறு: வைரமுத்து மீது வழக்குப்பதிவு


ராஜபாளையத்தில், நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசியதாக, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஹிந்து முன்னணி நகர் செயலர் சூரி, ராஜபாளையம் தெற்கு போலீசில், வைரமுத்து மீது புகார் அளித்துள்ளார்.

மேலும் புகார்


அதில், 'தமிழக அரசு சின்னமாக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கோபுரம் உள்ளது. வைணவர்களின் குல தெய்வமான ஆண்டாளை, கவிஞர் வைரமுத்து இழிவுபடுத்தி பேசி, மனதை புண்படுத்தி உள்ளார்.

அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து, வைரமுத்து மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. டில்லியில் செயல்படும், அகில இந்திய ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா செயல் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசர் என்பவரும், வைரமுத்து மீது, ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய, கவிஞர் வைரமுத்து மற்றும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் மீது, சென்னையில் சிந்தாதிரிபேட்டை மற்றும் கொளத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.

மேலும், சென்னையில் சூளை, பெருங்களத்துார் உட்பட, தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம், பேரணி நடந்தது.

உருவபொம்மை எரிப்பு


தேனி பங்களாமேட்டில் ஹிந்து முன்னணினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கவிஞர் வைரமுத்து உருவபொம்மை எரிக்கப்பட்டது.கோவை, பெரியகடை வீதியில் உள்ள, கெரடி வரதராஜ பெருமாள் கோவில் முன், ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீமத் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி தலைமையிலும், பா.ஜ., மாநில பொதுச்செயலர், வானதி சீனிவாசன் முன்னிலையிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வானதி சீனிவாசன் பேசுகையில்,''பால் பானையில் ஒரு துளி விஷத்தை கலப்பதுபோல, ஒரு கருத்தை வைரமுத்து தெரிவித்துள்ளார்.''கோவிலுக்குள் இருந்து வழிகாட்டிக்கொண்டும், அறிவுரை வழங்கியும் ஆசிர்வதிக்கக்கூடிய சமயப்பெரியோர் எல்லாரும், இன்று தெருவில் இறங்கி போராடவேண்டிய சூழல் உள்ளது. இவர்களின் உணர்வுகளுக்கு வைரமுத்து மதிப்பளிக்கவேண்டும்,'' என்றார்.

நிறைவில், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி நிருபர்களிடம் கூறுகையில், ''வைரமுத்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். வரும், 16ம் தேதிக்குள், ஸ்ரீவில்லிபுத்துார் தாயார் சன்னதியில் வந்து, வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும்.

''இல்லையேல், 17ம் தேதி, 9:00 மணி முதல் நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்போம். நல்ல விடை கிடைக்கவில்லையேல், அனைத்து மக்களும் குரல் கொடுத்து, ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வைரமுத்துவை வரவழைப்போம்,'' என்றார்.

Advertisement

புத்தக கண்காட்சியில் பரபரப்பு

சென்னை, அமைந்தகரையில் நடக்கும், புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகநுால் குழுவினர், கவிஞர் வைரமுத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், பள்ளி வளாகத்திற்குள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், முகநுால் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், புத்தகக் கண்காட்சிக்கு வந்த வாசகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.துறவியர் சங்கம் கண்டனம்


''தமிழகத்தில் குறிப்பாக, ஹிந்து மதத்தில், நம்பிக்கை கொண்டு அருட்பணி ஆற்றியவர்கள் குறித்து பல்வேறு வகையில், அவதுாறாக பேசுவதும், எழுதுவதும் தமிழகத்தில் வழக்கமாக போய் விட்டது. குறிப்பாக, நம் தமிழகத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், வாழ்க்கையை மட்டும் பழித்து சொல்வது தொடர்ந்து கொண்டுள்ளது. ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசியது வருத்தத்துக்குரியது. அகில இந்திய ஹிந்து துறவியர் சங்கம் சார்பில், இதற்கு வருத்தத்தை தெரிவிப்பதோடு கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்.- கோவை பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார்

வருத்தத்திற்குரியது


''நம்முடைய நாடு ஆன்மிக நாடு. ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி, மதத்தையும், தமிழையும் வளர்த்த பெருமைக்குரியது. ஆறாம் நுாற்றாண்டில் இருந்து, ஹிந்து மதம் வளர்வதற்கு தோன்றியவர்கள் அடியார்கள். அதில், பெண் அடியாராக போற்றப்படும் ஆண்டாளின் பாசுரம், பெண்களின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. அடியாராக இருந்து இறைவனை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் ஆண்டாள். அவரது பெருமையை சிறுமைப்படுத்தும் வகையில் வைரமுத்து கூறியிருப்பது வருத்தத்திற்குரியது.- சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார்

Advertisement

வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
badhrudeen - Madurai,இந்தியா
16-ஜன-201816:12:26 IST Report Abuse

badhrudeenjagan யார்? நீங்கள் தமிழரா?

Rate this:
தலைவா - chennai,இந்தியா
17-ஜன-201813:35:04 IST Report Abuse

தலைவா இல்லை மதவெறி பேசி மத கலவரத்தை தூண்ட நினைக்கும்......

Rate this:
pathy - chennai,இந்தியா
15-ஜன-201819:01:51 IST Report Abuse

pathyதமிழ் மொழியை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். பெரும்பாலானோர் திரு. வைரமுத்துவின் பேச்சையோ, கட்டுரையையோ முழுவதுமாக கேட்டார்களா, படித்தார்களா என சந்தேகமாக இருக்கிறது. ஒரு சில வரிகளை மட்டுமே உள்வாங்கி கருத்து கூறுவது, பார்வை இல்லாதவர் யானையை விளக்கியது போல், பல கோணங்களில் தான் முடியும். திரு. வைரமுத்து என்ற தனி மனிதனை பற்றி எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் "தமிழை ஆண்டாள்" என்ற தலைப்பில் அவர் பேசியது தமிழுக்கும் ஆண்டாளுக்கு அழகு சேர்த்தது. அந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணால் சுதந்திரமாக தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிந்தது பற்றி ஆச்சர்ய பட்டது. அவ்வையாருடனும், நாச்சியாருடனும் இருந்த பெண் சுதந்திர தெய்வீக காற்றை தொடர்பிலேற்றி களிப்படைந்து. தமிழர்களே, தயவு செய்து தமிழ் படியுங்கள். நடைமுறையில் முடியாவிட்டாலும் தூய தமிழை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

Rate this:
Arul - Manama,பஹ்ரைன்
15-ஜன-201814:31:37 IST Report Abuse

Arulவைரமுத்துவையும் ஆண்டாளையும் தெரியாதவர்கள் தேடி தெரிந்து கொள்வார்கள்.

Rate this:
மேலும் 124 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X