காங்கிரசுடன் கைகோர்க்க விஜயகாந்த் ஆசை! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காங்கிரசுடன் கைகோர்க்க
விஜயகாந்த் ஆசை!

உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்களில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் வியூகம் அமைத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

D.M.D.K,DMDK,Vijayakanth,தே.மு.தி.க,விஜயகாந்த்


விஜயகாந்த் தலைமையிலான, தே.மு.தி.க., பல தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு, 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது.

ரகசிய பேச்சு

அந்த தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்தி, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. 2014 தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, பல கட்சிகள் விரும்பின. காங்கிரஸ் தலைவர்களும், விஜயகாந்தை பல முறை ரகசியமாக சந்தித்து பேச்சு நடத்தினர்.


ஆனால், பா.ஜ., கூட்டணியில் தேர்தலை சந்தித்த, தே.மு.தி.க., தோல்வி அடைந்தது. பின், 2016ல், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது.

தற்போது,கட்சியை கட்டமைக்கும் பணியில், விஜயகாந்த் ஆர்வம் செலுத்தி வருகிறார்.உள்ளாட்சி, லோக்சபா தேர்தல் கூட்டணிகள் குறித்தும், கட்சியினருடன் அவர் ஆலோசனை செய்து வருகிறார்.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:கட்சி துவங்கியதில் இருந்தே, காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமான போக்கில், விஜயகாந்த் உள்ளார். தன் தந்தை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால், அக்கட்சி மீது, விஜயகாந்திற்கு ஈடுபாடு அதிகம்.

இருப்பினும், '2ஜி' வழக்கால், காங்கிரசுடன் கூட்டணிவைக்க முடியாத நிலைக்கு, விஜயகாந்த்தள்ளப்பட்டார். தற்போது, அந்த வழக்கின் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர்.

Advertisement

வாழ்த்து கடிதம்
இதனால், லோக்சபா தேர்தலை, காங்., கட்சியுடன் இணைந்து எதிர்கொள்ள விஜயகாந்த் விரும்புகிறார். இதற்காக, காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுலுக்கு, விஜயகாந்த் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.அதேநேரத்தில், குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்ற, பா.ஜ.,வுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

காங்., கட்சி ஒத்துழைத்தால், உள்ளாட்சி தேர்தலிலேயே, இந்த கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
14-ஜன-201821:26:28 IST Report Abuse

V GopalanThis is one more step to close down the shop of both, it is a welcome move and if the voting on symbol tem is abolished, not only the congress and other National/Regional Parties would have been wiped out. If country is to achieve development symbol free election is a must.

Rate this:
Rajesh - Delhi,இந்தியா
14-ஜன-201818:38:10 IST Report Abuse

Rajeshசீக்கிரம் கடைய மூடுங்க

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜன-201817:54:04 IST Report Abuse

Nallavan Nallavanதேமுதிக -வுக்குத் தற்கொலை செய்துகொள்ள உரிமை உண்டா, இல்லையா ?

Rate this:
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201811:59:17 IST Report Abuse

மனிதன்இப்போ மட்டும் காங்கிரஸ் இலங்கையில் கொன்று குவிக்க காரணமாக இருந்த பாவம் எல்லாம் சரியாப்போச்சா மிஸ்டர் காந்த் எல்லாம் சந்தர்ப்பவாதிதான் என்பது கூட்டணி முடிவானால் உண்மையாகும்

Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
14-ஜன-201809:35:16 IST Report Abuse

S Rama(samy)murthyபாவம் , திரு விஜயகாந்த் ,தேமுதிக வுக்கு முடிவுரை எழுதிவிட்டார்.

Rate this:
Anandan - chennai,இந்தியா
14-ஜன-201809:03:23 IST Report Abuse

Anandanகட்சியை ஒழிப்பதில் குறையாய் இருக்கிறாரோ கேப்டன்.

Rate this:
KV Pillai - Chennai,இந்தியா
14-ஜன-201807:43:52 IST Report Abuse

KV Pillaiபக்தாஸ்களின் வயிற்றெரிச்சலையும் பயத்தையும் இங்கே அவர்கள் கருத்தாகப் பதிவு செய்வார்கள்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஜன-201806:39:20 IST Report Abuse

தேச நேசன் ஏற்கனவே காங்கிரஸ் சசியுடன் கூட்டு அமைந்துவிட்டது அதிகாரபூர்வ அறிவிப்புதான் பாக்கி

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-ஜன-201800:53:22 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பாஜக அடிமை திமுகவுடன் வைத்திருப்பது என்ன தொடர்பு?...

Rate this:
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
14-ஜன-201806:10:13 IST Report Abuse

Subburamu Krishnaswamyகாலி பாட்டில் எந்தப்பக்கம் உருண்டுபோன என்ன ஆகப்போகுது

Rate this:
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201801:12:01 IST Report Abuse

வாழ்க​ பாரதம்கழைக்கூத்தாடியுயுடன் கேடு கேட்ட காங்கிரஸ்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement