மனம் திறந்த மா.செ.,க்கள்: மனம் நொந்த ஸ்டாலின் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மனம் திறந்த மா.செ.,க்கள்:
மனம் நொந்த ஸ்டாலின்

'மனம் திறந்து பேசுங்கள்' என, மாவட்ட செயலர்களுக்கு சுதந்திரம் அளித்தால், அவர்களில் சிலர், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் குணாதிசயத்தை சுட்டிக்காட்டிய தகவல்கள், சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்


இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்,தி.மு.க., 'டிபாசிட்' இழந்ததை தொடர்ந்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து, ஜன., 7ல், அறிவாலயத்தில், 65 மாவட்ட செயலர்கள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் நடந்தது.

தனிப்பட்ட குணாதிசயம்


அதில், முதன்மை செயலர், துரைமுருகன், 'மனம் திறந்து பேசுங்கள்' என, மாவட்ட செயலர்களுக்கு, பச்சைக் கொடி காட்டினார்.தென் மாவட்டத்தைச் சேர்ந்த, ஒரு மாவட்ட செயலர், 'ஸ்டாலின் காரில் பயணிக்கும்போது, மொபைல் போனை பார்த்தபடி மட்டும் செல்லக் கூடாது; வெளியே இருக்கும் தொண்டர்கள், மக்களை பார்த்து கை அசைக்க வேண்டும்' என்றார்.

வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுகையில், 'சுற்றுப்பயணம் செல்லும்போது,

அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை தான்,ஸ்டாலின் தன் காரில் ஏற்ற வேண்டும்; ஆனால், குறிப்பிட்ட சிலரை மட்டும், காரில் ஏற்றக்கூடாது' என்றார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை பேச அனுமதித்தால், ஸ்டாலினின் தனிப்பட்ட குணாதிசயத்தை, சிலர் விமர்சித்து உள்ளனர்.'எமர்ஜென்சி' காலத்தில் இருந்து, 42 ஆண்டுகளாக, அரசியல் வாழ்வில், ஏற்றம், இறக்கம்,வெற்றி, தோல்விகளை சந்தித்தவர், ஸ்டாலின்.

சுய பரிசோதனை


அவர் எடுக்கும் அரசியல் முடிவு, தேர்தல் வியூகம், வேட்பாளர் தேர்வு குறித்து விமர்சிக்கலாம். ஆனால், குணாதிசயத்தை விமர்சித்ததை, தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஸ்டாலின் மனதையும், இந்த விமர்சனம், காயப்படுத்தி உள்ளது.

தி.மு.க., தலைவர், கருணாநிதியின் செயல்பாடுகள், கூட்டணி முடிவுகளில் ஏற்பட்ட தவறுகள் போன்றவற்றை, மறைந்த மாறன், வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் விமர்சித்தது உண்டு.அப்போதெல்லாம், கருணாநிதியின் குணாதிசயத்தை யாரும் விமர்சிக்கவில்லை.

எனவே, தொண்டர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் ஸ்டாலின்,தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும் என்ற அடிப்படையில், சமூக வலைதளங்களில், கிண்டலும்,கேலியுமாக விமர்சித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பு


சட்டசபைக்கு வெளியே, ஸ்டாலின் பேட்டி அளித்தபோது, மூத்த எம்.எல்.ஏ.,க் கள் இருவர், முட்டி மோதி கொண்டதையும்,

Advertisement

ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்ற அதிருப்தியும், தொண்டர்கள் மத்தியில் உருவாகிஉள்ளது.
அதேபோல், ஜன., 6ல் நடந்த மாநாட்டில் பேசிய, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி, 'திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால், எதற்கு காவல்' என்றார். அவரது பேச்சுக்கு, ஹிந்து அமைப்புகளின் சார்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., தேசிய நிர்வாகி ஒருவர், கருணாநிதியின் வாய் பேச முடியாத நிலையையும், அவர் ஹிந்து தெய்வத்தை கிண்டலடித்து பேசியதையும் முடிச்சு போட்டு, கடுமையாக விமர்சித்து உள்ளார்.கருணாநிதியை பற்றி,பா.ஜ., நிர்வாகி விமர்சித்ததை, ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை என்ற அதிருப்தியும்,தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, பா.ஜ.,வுக்கு, கருணாநிதி பாணியில் பதிலடி, ஸ்டாலின் கொடுக்க வேண்டும் என, தொண்டர்கள் விரும்புகின்றனர்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
14-ஜன-201821:43:36 IST Report Abuse

mohankumarஇன்றைய நிலையில் கிறிஸ்தவ ராகுல் வின்சி குஜராத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளுக்காக பூணூல் போட பிராமிணன் என்றார்,பின்னர் குஜராத்தில் ஏறி இறங்காத கோயில்கள் இல்லை . குஜராத்தை தேர்தலுக்கு முன்னர் ராகுல் வின்சி கோயில் போன போட்டோக்கள் உண்டா இல்லை .நான் ஒரு இந்து என்று பல்டி அடிக்கிறார் . எல்லாரும் சிந்திக்க வேண்டும் ஒரு காலத்தில் வீர சாவர்க்கர் 40 வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டார் இந்த காங்கிரஸ் ஒருகாலத்தில் வோட்டு பிச்சைக்காக நிச்சயம் சொத்திற்கு மேலே பூணூல் போட்டு நான் ஒரு இந்து என்று கூறி வோட்டுக்கு அலைவார்கள் என்று ஆண்ட்ரே கூறினார் இப்போது அது குஜராத்தில் காங்கிரஸ் மக்களை ஏமாற்ற பார்த்தது . மக்கள் காங்கிரஸ்க்கு தோல்வியை தான் தந்தது . காங்கிரஸ் காரனே தன நிலையை மாற்றி கொண்டு தான் ஒரு பூணூல் போட பிராமணன் என்று கூறி திரியும் போது தமிழகத்தில் இன்னமும் இந்து எதிர்ப்பு என்ற போரவையில் போய் மத சார்பின்மை கூறி திரிந்தால் நிச்சயம் திமுக தோல்வியை தழுவும் . இன்று இந்து மதம் பெரும் எழுச்ச்ய் பெற்று கொண்டிருப்பதற்கு சான்று கோயில்களில் பத்தர்கள் கூட்டம் அலை மோதுவதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் போய் மத சார்பு பேசுபவர்களே . அய்யப்பன் கோயிலுக்கு போலாவோரின் எண்ணிக்கை பல லட்சங்கள் . இதிலிருந்தே உங்கள் நாத்திகம் தோற்று விட்டது என அறிந்து கொள்ளுங்கள் . மக்கள் மெல்ல மெல்ல உங்களுக்கு எதிர்ப்பு காட்ட துவங்கி விட்டார்கள் . இனியாவது போய் மத சார்பு பேசி நடக்காதீர்கள் நாடு நிலையாக இருந்தால் உங்கள் காலம் ஓடும் இல்லாவிட்டால் நீங்கள் அரசியலில் நீடிக்க முடியாது . ஆணம்மேகம் கலந்த அரசியல் நிச்சயம் வெற்றி பெரும் என்பதற்கு பிஜேபி ஒரு உதாரணம் . அதே போல் ரஜனி நிச்சயம் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு சவாலாக தான் இருப்பார் . உண்மையை கூறுங்கள் எல்லா மதத்தவரும் உங்களுடன் வருவார்கள் . காலம் மாரி கொண்டிருக்கிறது இன்றைக்கு மற்ற மதத்தவரும் இந்த போய் மத சார்பு கொள்கையை ஆதரிக்கவில்லை . மோடியின் தைரியமான இந்து கொள்கையை கண்டு மக்கள் அவர் பின் செல்கிறார்கள் ஏன் மற்றற்ற மதத்தவரும் அவரை நம்புகிறார்கள் காரணம் அவர் போய் மத சார்பின்மை பேசி வேஷம் போடவில்லை .

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜன-201820:42:57 IST Report Abuse

Bhaskaranதன மாமனாரின்பவளவிலாவை வைதீக முறைப்படி கொண்டாடி மகிழ்ந்த சுடாலின் வைரமுத்துவுக்கு வாழ் பிடிப்பது எதற்காக ஒன்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இவர்கள் தான் உங்களுக்கு அனுகூல சத்ரு கள்

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
14-ஜன-201817:18:14 IST Report Abuse

Krish Samiபா ஜ க வை பற்றிய விமர்சனங்கள் எனக்கும் உண்டு. ஆனால் கனிமொழி போன்றவர்கள் உத்தமர் தானா? திருப்பதி ஏழுமலையானை பற்றி கிண்டல் அடிக்கும் கனிமொழிக்கு மற்ற மதங்கள் பற்றி குறை கூறி பேச முடியுமா? தி மு க போன்ற கட்சிகளின் இரட்டை வேடமே, முதன்மையான காரணம் அதன் வீழ்ச்சிக்கு. இவர்கள் கேரளா இடதுசாரிகளிடம் இருந்தது கற்றுக்கொள்ள வேண்டும். மதம் குறித்த விமர்சனங்களை அவர்கள் பொதுவாக தவிர்த்து விடுவார்கள். இங்கு ஹிந்து, கிரிஸ்துவர், இஸ்லாமியர், நாத்திகர்கள் - யாவருமே தீவிரமாக அவரவர் நம்பிக்கைகளை கடைபிடிப்பவர்கள். ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை கேவலமாக பேச மாட்டார்கள். இடையில் ஸ்டாலின் ஓரளவு நடு நிலைக்கு முயன்றது உண்மை. அதை அவர் தீவிரமாக செய்தால், தி மு க இப்பொழுதும் வளர வாய்ப்புண்டு. வீரமணி, சுப வீரபாண்டியன் போன்றவர்களை ஓரம் கட்டினாலே போதும். வாழ்த்துக்கள்.

Rate this:
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
14-ஜன-201816:21:44 IST Report Abuse

fire agniputhranஇந்துக்களின் மனம் மட்டுமே புண்படும்படி பேசும் தலைவர்களையும் திமுகவிற்கு வக்காலத்து வாங்கும் தலைவர்களையும் (வைரமுத்து, திராவிட மணி ,சுப.வீரபாண்டியன்) வைத்துக்கொண்டு திமுக பயணம் செய்தால் இனி....எந்த காலத்திலும் ஆட்சியை பற்றி கனவுஸ்டாலின் கண்டுகொண்டே இருக்கவேண்டியது தான்....

Rate this:
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
14-ஜன-201814:51:28 IST Report Abuse

R.SANKARA RAMANநான் திமுக ஆதரவாளன் இல்லை. இருந்தாலும் திரு ஸ்டாலின் ஒரு சிறந்த அரசியல்வாதியாக இல்லாமல் இருப்பதற்கு அவருடன் கூட இருந்து குழி பறிக்கும் மூத்த தலைவர்களே. அவர்களை ஓரம் கட்டிவிட்டு துடிப்பாக செயல்படும் பிரசன்னா, சரவணன் போன்றவர்களின் துணையை நாடலாம். காங்கிரஸ் மற்றும் சிவப்புச் சட்டைக் காரர்களை புறம் தள்ள வேண்டும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201814:10:06 IST Report Abuse

Pugazh Vமீண்டும் அதிமுகவே வந்துருமா??// இதிலென்ன சந்தேகம் ? வீணாப்போன தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி ன்னு சொல்லி சொல்லி நடுத்தர மக்கள் தலைலயே வுடாம அடிக்கிற காவி தீவிரவாதிகளின் ஆசியுடன் இபிஎஸ் ஆட்சி தான் இனியும். என்ஜாய்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201814:03:10 IST Report Abuse

Pugazh Vதிமுக எதிரிகளுக்கான கற்பனை கதை. கண்ணை மூடிக்கொண்டு நம்பி எதாவது பிதற்றவும்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜன-201813:53:10 IST Report Abuse

balakrishnanமனம் திறக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, பிறகு மனம் நொந்து பிரயோஜனம் இல்லை, நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும், மாற்றங்கள் மட்டும் தான் மாறாதது

Rate this:
Kabilan E - Chennai,இந்தியா
14-ஜன-201813:09:52 IST Report Abuse

Kabilan Eசாக்கடைகள் எல்லாம் தெய்வங்களை இழிவு படுத்துதுங்க...அலங்கோலத்தின் முழு உருவம்...

Rate this:
Kabilan E - Chennai,இந்தியா
14-ஜன-201813:01:23 IST Report Abuse

Kabilan Eஇந்த அலங்கோல மொழிக்கு ஏழுமலையானை இழிவு படுத்த என்ன தகுதி இருக்கு....

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement