ப.சிதம்பரம், அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில் 'ரெய்டு!' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ப.சிதம்பரம், அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில் 'ரெய்டு!'

சென்னை மற்றும் டில்லியில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் வீடு, அவரது மகன் கார்த்தி வீடு மற்றும் அலுவலகங்களில், மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில், டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் இருந்து, சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். 'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில், அன்னிய நிதி பரிமாற்ற முறைகேடு தொடர்பாக நடந்த, இந்த சோதனையால், சிதம்பரத்திற்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

ப.சிதம்பரம், அவரது மகன் வீடுகள், அலுவலகங்களில் 'ரெய்டு!'


கடந்த, 2006ல், மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் இருந்த போது, மலேஷியாவை சேர்ந்த, 'மேக்சிஸ்' நிறுவனம், இந்தியாவில், 'ஏர்செல்' நிறுவனத்தில் முதலீடு செய்ய, மகன் கார்த்தி மூலமாக உதவியதாக, புகார் எழுந்தது. இதேபோல், 2007ல், 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' என்ற தொலைக்காட்சி நிறுவனம், அன்னிய முதலீட்டை முறைகேடாக பெற்றது.

அப்போது, நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, எப்.ஐ.பி.பி., என்ற, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், நிபந்தனைகளை மீறி, அப்பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல்வழங்கியதாக கூறப்பட்டது.

விசாரணை
அதற்கு உதவியதற்காக, கார்த்தியின் நிறுவனம், பெரும் தொகையை பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, பி.எம்.எல்.ஏ., என்ற, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனால், 2015 டிசம்பரில், சென்னையில் உள்ள கார்த்தி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய, 'செஸ் கன்சல்டிங்; அட்வான்ஸ் ஸ்டராட்டஜிக் சொல்யூஷன்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூட்டாக சோதனை நடத்தினர்.

அது, 'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில், ஏர்செல் நிறுவனத்திற்காக நடந்த, அன்னியநிதி பரிமாற்ற முறைகேடு மற்றும் தனியார் கண் மருத்துவமனை முதலீடுகள் தொடர்பாக நடத்தப்பட்டது.

பின், ஒரு வார இடைவெளியில், அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். அதில், அவ்வழக்கு தொடர்புடைய சில ஆவணங்களை பறிமுதல் செய்ததாக, அமலாக்கத் துறை அறிவித்தது. இது தொடர்பாக, 2016 ஏப்ரலில், பெங்களூரில் உள்ள, 'செகோயா' நிறுவனத்தில் சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, 2016 மே மாதத்தில், சென்னை மற்றும் டில்லியில் உள்ள, கார்த்தி வீடு, அலுவலகங்கள் உட்பட, 14 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில், 'எல்டரோடா' அலுவலகம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள, நளினிசிதம்பரம் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. அதேநேரத்தில்,

Advertisement

மகளை கொலை செய்த வழக்கில், சிறையில் அடைபட்டிருந்த, ஐ.என்.எக்ஸ்., நிறுவன உரிமையாளர், பீட்டர் முகர்ஜி, மனைவி இந்திராணி வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இறுதியாக, 2017 டிச., 1ல், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், சிதம்பரத்தின் உறவினர் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.சென்னை, டில்லி அதன் தொடர்ச்சியாக, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, கார்த்தி வீட்டுக்கு, டில்லியில் இருந்து வந்த, ஐந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று காலை, 7:30 மணி முதல் சோதனை நடத்தினர்.

மேலும், வீட்டின் அருகில் உள்ள, எல்டரோடா, செஸ் கன்ஸல்டிங் உள்ளிட்ட, மூன்று இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது, சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் வீட்டில் இல்லை; கார்த்தியின் மனைவி ஸ்ரீநிதி, சிதம்பரத்தின் மனைவி நளினி ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

அதே நேரத்தில், டில்லி அருகில் உள்ள கார்த்தி வீடு மற்றும் சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களிலும், அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையில், சிதம்பரத்தின் வீடுகளில் இருந்து, சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனை தொடர்பாக, கார்த்தி தரப்பு வழக்கறிஞர், அருண் நடராஜ் கூறும்போது, ''சென்னையில் நடந்த சோதனை, காலை, 10:45 மணிக்கு நிறைவடைந்தது; ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. யாரிடமும் விசாரணை நடத்தவில்லை,'' என்றார்

மீண்டும், 'சம்மன்!'


ஐ.என்.எக்ஸ்., வழக்கில், அமலாக்கத்துறை, ஏற்கனவே அனுப்பிய சம்மனை ஏற்று, கார்த்தி ஆஜராகாததால், விசாரணைக்கு ஆஜராகும்படி, சில தினங்களுக்கு முன், மீண்டும், 'சம்மன்'அனுப்பியுள்ளது. அதன்படி, அவர், 16ம் தேதி ஆஜராக வேண்டும். அப்போது, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
15-ஜன-201803:13:33 IST Report Abuse

Anandanஇதுவும் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமை செயலாளர், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் செய்த ரைட் போலத்தானா? ஏகப்பட்ட ரைட் பார்த்த்தாச்சு ஒரு நடவடிக்கையும் இல்ல்லையே. கண்டைனர் பணத்தையே SBI பணம்னு ரெண்டு நாளைக்கு அப்புறம் பொய் சொன்ன அரசுதான் இது.

Rate this:
Chandru - chennai,இந்தியா
14-ஜன-201816:02:22 IST Report Abuse

Chandruஊழல் செய்யக்கூடாது எம்பீர் ரெய்டு செய்தால் என்ன கண்டு பிடித்தீர் எம்பீர். எல்லாரிடமும் சொல்லிவிட்டு அப்புறம் தான் ரெய்டு வேண்டும் போல் உள்ளது . கணக்கர் நிரம்ப ஜாக்கிரதை ஆனவர் . அவரை கை ஆள்வது கடினம் . ஆனால் விடக்கூடாது . பி ஜே பி கேஸ் போட்டால் எல்லா தமிழக முசுலீம்களும் எதிர்கிறார்கள் . ஏன் என்று புரிய வில்லை . இவர்கள் கை காட்டுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என நம்ப சொல்லுகிறார்களா . எதை எடுத்தாலும் விமர்சனம் ஏன் ?

Rate this:
14-ஜன-201815:23:23 IST Report Abuse

RamachandranKrishnamurthyநாட்டில் உள்ள திருட்டு பய அனைவருக்கும் இவரு வக்கீல். இவரு அவ்வளவு எளிதில் சிக்குவாரா?

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-ஜன-201820:20:24 IST Report Abuse

Rahimஉங்க ஜட்டி லீ தான் அணைத்து திருடர்கள் மற்றும் விஷவாயு முதலாளிக்கு எல்லாம் ஒரே வக்கீல் , வரி ஏய்ப்பு செய்த நோக்கியா நிறுவனத்திற்கும் இந்த ஜட்டி லீ தான் வக்கீல் ,வெட்கமே இல்லாமல் மல்லாந்து படுத்துகிட்டு எச்சிலை துப்பின உங்க மூஞ்சில தான் விழும்....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201814:27:52 IST Report Abuse

Pugazh Vஎந்த ஆவணமும் கிடைக்காமல், அதிகாரிகள் மன்னிப்பு கோரிவிட்டு சென்றார்கள் என்று செய்தி.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201813:41:57 IST Report Abuse

தமிழ்வேல் 16 ந்தேதி காணும் பொங்களாச்சே..

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஜன-201822:31:58 IST Report Abuse

K.Sugavanamயாருக்கு?...

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
14-ஜன-201812:51:19 IST Report Abuse

rajaஎந்த மாதிரியான மிரட்டல் விடப்படுகின்றன என்பது தெரியவில்லை. வயிற்றில் உள்ள குழந்தைக்கு கூட தெரியும் இவ்வளவு நாள் கழித்து எந்த ஆதாரமும் கிடைக்க போவது இல்லை என்று. திரு சிதம்பரம் மிரட்டப்படுவது தவிர எதுவும் நடக்காது என்பது தெரிகிறது. இதற்கு பத்திரிகைகள் வரிந்து கட்டி கொண்டு துணை போகிறது.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜன-201812:13:50 IST Report Abuse

balakrishnanஏற்கனவே நடந்து முடிந்த சோதனைகள் எதுவுமே முடிவு தெரியாமல் ஓடுகிறது., அதிகாரம் இருக்கு, எதுவேண்டுமானாலும் செய்யலாம், அடுத்த தேர்தல் வரப்போகுது, ஏதாவது கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும், ஒன்றும் கிடைக்காததால் ஏமாற்றமா இருக்கு., தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன், அம்புலிமாமா கதாபாத்திரம் போல வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-ஜன-201810:32:45 IST Report Abuse

Devanatha Jagannathanவடிவேலு காமெடி நினைவுக்கு வருது. டாய் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாண்டா ரொம்ப நல்லவன்டா.

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-ஜன-201810:07:49 IST Report Abuse

Rahimநீங்க குற்றவாளி என்று சொன்னால் அது உண்மை ஆகிவிடாது , அரசியல் வண்டியை ஓட்ட உங்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை ,மக்கள் திட்டங்களென்று எதுவுமே இல்லை, இருப்பது எல்லாமே அரசியல் பழிவாங்கல் , மத பிரச்சினைகள், மாதா மாதம் ரூபாய் நோட்டு மாற்றம் போன்றவை மட்டுமே, பெட்டிக்கடை வைக்க ஆதார் அவசியமாம் இனி தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவும் ஆதார் கேட்பீர்கள் போல.

Rate this:
sridhar - Chennai,இந்தியா
14-ஜன-201812:33:02 IST Report Abuse

sridharஉங்கள் பெயர் உங்களை இப்படி பேச வைக்கிறது. Khancross ஜால்ரா....

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-ஜன-201817:48:31 IST Report Abuse

Rahimநாங்கள் எல்லாம் வரி மட்டும்தான் கட்டவேண்டுமா ? அரசை விமர்சிக்க உரிமை இல்லையா ? அரசியல் கருத்து கூறுவதற்கும் கமிஷன் வைக்க வேண்டுமா ?...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஜன-201822:33:02 IST Report Abuse

K.Sugavanamஅப்போ நீங்க Corp cross ஜால்றாவோ?...

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-ஜன-201810:04:25 IST Report Abuse

Rahimதலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் கூறிய புகார் செய்தியை மறக்கடிக்க இந்த வேலையை செய்திருக்கிறார்கள் , மத்திய அமலாக்கத்துறைக்கு இங்கு ரெய்டு நடத்த எந்த முகாந்திரமும் இல்லை ஆனால் நீதிபதி பற்றிய செய்தியை புஷ்வாணம் ஆக்க இந்த ரெய்டு , அதாவது 4 நீதிபதிகளின் ஊடக சந்திப்புதான் இரண்டு நாட்களாக அணைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ஹைலைட் இதை மாற்ற மற்றுமொரு பரபரப்பு செய்தி தேவை அதன் வெளிப்பாடுதான் இந்த ரெய்டு ,

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement