மதுரை பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு 1,000 காளைகள், 1,088 காளையர், 'ரெடி' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மதுரை பாலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு
1,000 காளைகள், 1,088 காளையர், 'ரெடி'

அலங்காநல்லுார் : மதுரை பாலமேட்டில் நாளையும், அலங்கா நல்லுாரில் நாளை மறுநாளும் ஜல்லிக்கட்டு நடக்கிறது.

Jallikattu,Madurai,ஜல்லிக்கட்டு,மதுரை


பாலமேட்டில், 1,000 காளைகள், 1,088 வீரர்கள்; அலங்காநல்லுாரில், 1,000 காளைகள், 1,241 வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள டோக்கன் பெற்றுள்ளனர்.காலை, 8:00 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்குகிறது. வாடிவாசல் வழியாக கோவில் காளைகள், பின் மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படும்.

விதிமுறைகள்


அவனியாபுரம், அலங்கா நல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகள்:டோக்கன் பெற்றவர் ஜல்லிக்கட்டு நாளில் காலை, 6:00 மணிக்கு வாடிவாசல் பின்பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் காளைகளுடன் தயாராக இருக்க வேண்டும். 50 நபர்கள் வீதம் டோக்கன் எண் வரிசைப்படி மைக் மூலம் அழைக்கப்படுவர்.

காளைகளை கால்நடை மருத்துவ குழுவிடம் காண்பிக்க வேண்டும். டோக்கனை சரிபார்த்து, காளைகளை பதிவு செய்து உடல் தகுதி


சோதனை செய்வர். தகுதியான காளைகளுக்கு மட்டுமே பங்கேற்க இயலும். கூர்மை யான ஆயுதம், இதர பொருட்களால் காளைகளை துன்புறுத்தக் கூடாது.

பரிசுகள் ரெடி


அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டுஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:பார்வையாளர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு, காளைகள், வீரர்களின் பாதுகாப்புவசதிகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.அரசு தரப்பில் விழாக்குழு அமைக்கப்பட்டு மாடு பிடி வீரர், காளைகளுக்கு புதுமையான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

எந்த சூழ்நிலையிலும் தமிழர்களின் பாரம்பரியம், உரிமையை பாதுகாப்போம் என்பதைஅலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார். பாலமேட்டில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

அலங்காநல்லுார் ராமர்: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில், முதலாவதாக முனியாண்டி கோவில் காளைஅவிழ்த்து விடப்படும்.இக்காளையை கோவில் சார்பில் வாடிவாசல் முன் அவிழ்த்து விடுவேன். கோவில் காளை என்பதால், வீரர்கள் பிடிக்க மாட்டார்கள். தொட்டு வணங்கி வேண்டி கொள்வர்.

Advertisement

இக்காளை பிற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றி முகத்துடன் பரிசுகளை அள்ளி வரும். மதுரை கோவில்பாப்பாகுடி ரெக்கம்மாள்: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் என் காளை பங்கேற்பதற்காக டோக்கன் பெற நேற்று முன்தினம் இரவு, 3:00 மணிக்கு வந்தேன். மறுநாள் மதியம், 1:00 மணி ஆன நிலையில் டோக்கன் கிடைக்கவில்லை.

கடைசி நேரத்தில் டோக்கன் கிடைத்தாலும், ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்து விட நேரம் கிடைக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவனியாபுரத்தில் இன்று

அவனியாபுரம் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் சார்பில், இன்று காலை, 8:00 மணிக்கு ஜல்லிக்கட்டு நடக்கிறது. 967 காளைகள், 676 வீரர்கள் களம் காண்கின்றனர். பரிசுகளை வாரி வழங்கவும், டோக்கன் பெற்ற அனைத்து காளைகளையும் அவிழ்த்து விடவும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
14-ஜன-201816:18:18 IST Report Abuse

Sahayamகதை கட்டி இதை நடக்க விடாமல் தடுத்த மத்திய அரசின் செயல்பாட்டை மக்கள் மறக்க மாட்டார்கள்

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
14-ஜன-201816:16:52 IST Report Abuse

Sahayamநம் போராட்டம் வீணாக வில்லை என நினைக்கும் போது புல்லரிக்கிறது

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201812:54:28 IST Report Abuse

Kasimani Baskaranபாதுகாப்பாக ஜல்லிக்கட்டு நடக்க வாழ்த்துக்கள்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X