வங்கி பண மோசடி வழக்கு முன்னாள் இயக்குனர் கைது| Dinamalar

வங்கி பண மோசடி வழக்கு முன்னாள் இயக்குனர் கைது

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குனர், அனுாப் பிரகாஷ் கார்க், 5,000 கோடி ரூபாய் வங்கி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008 - 2009ல், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, 'ஸ்டெர்லிங் பயோடெக்' என்ற மருந்து நிறுவனம், ஆந்திரா வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் இருந்து, 5,000 கோடி ரூபாய் கடன் பெற்றது. இது தொடர்பாக, ஆந்திரா வங்கியின் அப்போதைய இயக்குனர் அனுாப் பிரகாஷ் கார்க்குக்கு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு போலி நிறுவன பெயரில், 1.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும், அந்த பணம், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதும், வருமான வரித் துறை ஆய்வில் தெரிய வந்தது.அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் நிலுவை தொகை, 5,383 கோடியாக இருந்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மருந்து நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஆந்திரா வங்கியின் இயக்குனராக இருந்த கார்க் ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் அறிவித்தனர்.
கார்க் மீது, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுாப் பிரகாஷ் கார்க்கை, அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X