ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைக்குமா? - அரசின் அனுமதிக்கு கழகம் காத்திருப்பு Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கிடைக்குமா?
ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைக்குமா?
அரசின் அனுமதிக்கு கழகம் காத்திருப்பு

ரேஷனில், பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்குவதற்கு, அரசு அனுமதியை எதிர்பார்த்து, அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைக்குமா? - அரசின் அனுமதிக்கு கழகம் காத்திருப்பு


தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தில், கிலோ மசூர் பருப்பு, 30 ரூபாய்; 1 லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்ற, குறைந்த விலைக்கு விற்கப் படுகின்றன.
இவற்றை, நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, கடைகளுக்கு சப்ளை செய்கின்றன.


சிறப்பு பொது வினியோக திட்ட காலக்கெடு, 2017 ஆக., 28ல் நிறைவடைந்தது. பின், ஆறு மாதங்கள், அதாவது, 2018 பிப்., வரை நீட்டித்தது. இது, அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.




நீட்டிப்பு



இது குறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறப்பு பொது வினியோக திட்டம், 2007ல் துவக்கப்பட்டது. இது, ஆறு மாதம் - ஓராண்டு என, நீட்டிக்கப்பட்டு வருகிறது. நிதி நெருக்கடி மற்றும் பருப்பு கொள்முதல் முறைகேடுகளால், அத்திட்டத்தை, 2017 ஜன., மாதம் நிறுத்த, அரசு முடிவு செய்தது. இதனால், பருப்பு, பாமாயில் வாங்காததால் தான், அந்த ஆண்டு, பிப்., மார்ச் மாதங்களில், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.


பின், 1 கிலோ பருப்பு மற்றும் பாமாயில் வழங்க, ஆறு மாதங்களுக்கு, அரசு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டது. இது, ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்ததால், மீண்டும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.


இதுவும், அடுத்த மாதம் முடிகிறது. கடைசி நேரத்தில், திட்டத்திற்கு நீட்டிப்பு வழங்குவதால், பொருட்கள் கொள்முதல் மற்றும் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. அதை சாதகமாக பயன்படுத்தி, 'டெண்டரில்' பங்கேற்கும் நிறுவனங்கள், அதிக விலை கோருகின்றன.இதை தவிர்க்க, தற்போது, திட்ட நீட்டிப்பு தொடர்பாக, அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டால், உடனே பொருட்கள் வாங்கும் பணி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




மசூர் பருப்பு வேண்டாம்



துவரம் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு, மசூர் பருப்பு என, ஏதேனும் ஒன்றை வாங்க, அரசு, அரசாணை வெளியிடுகிறது. அரசியல் குறுக்கீடுகளால், மக்கள் விரும்பாத, தரமற்ற மசூர் பருப்பு, அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. இதை தவிர்க்க, தற்போது, அரசாணையில், துவரம் பருப்பு மட்டும் வாங்க வேண்டும் என்று குறிப்பிடும்படி, அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement