கோவை, மதுரை, சேலத்தில் 'பஸ் போர்ட்' அமைக்க முடிவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோவை, மதுரை, சேலத்தில்
'பஸ் போர்ட்' அமைக்க முடிவு

சேலம் : ''கோவை, மதுரை, சேலத்தில் அதிநவீன வசதிகள் அடங்கிய, 'பஸ் போர்ட்' அமைக்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இரும்பாலை சாலை சந்திப்பில், 21.97 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.
முதல்வர் பழனிசாமி, அடிக்கல் நாட்டி பேசியதாவது: வேறு எந்த ஆட்சியிலும், சேலம் மாவட்டத்தில், இந்த அளவுக்கு மேம்பாலங்கள் கட்டப்படவில்லை. சேலம், புறநகர் பகுதியில், போக்குவரத்து பிரச்னையை

தீர்க்க,மல்லுாரில் இருந்து, அரபிக் கல்லுாரி வரை, 21 கி.மீ.,க்கு புறவழிச் சாலை அமைக்கவும்...
சேலம், கோவை, மதுரையில், விமான நிலையங்களுக்கு இணையான வசதிகள் கொண்ட, 'பஸ் போர்ட்' என்ற நவீன பஸ் நிலையம் அமைக்கவும், மத்திய அமைச்சர், நிதின் கட்கரி, அனுமதி வழங்கியதற்கு நன்றி.
சேலத்தில், அதிநவீன பஸ் நிலையம் அமையும் இடம் குறித்து, தீவிர ஆய்வு நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சேலத்தில், 'பஸ் போர்ட்' அமைக்க இடம் தேர்வானதும், மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, இறுதி செய்த பின், கட்டுமான பணிகள் துவங்கும். மதுரை, கோவையிலும் ஆய்வு நடக்கிறது.

Advertisement

Salem,சேலம்நீதிமன்ற வழக்கு காரணமாக, குட்கா பற்றி பேசுவது, வழக்கில், குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதால், அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kala - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201816:32:54 IST Report Abuse

kalaEdappadi & OPS are very famous in giving bogus promises. Mr Edappadi are you using your own fund or governmental funds for the deveopment or Salem? See to the other parts of TN especially Trichy being the central part of TN lacks a proper bus stand iteself for more than 20 years. In this situation he wants to bring bus port to Salem. Are you not shame on your part? Don't be partial be broadminded to serve all the parts of TN.

Rate this:
tamilan - madurai,இந்தியா
14-ஜன-201818:13:04 IST Report Abuse

tamilan உங்களுக்கெள்ளாம் மனசாட்சியே இல்லையா ஓ பி எஸ்,ஈ பி எஸ் ...நாட்டை கெடுக்க வந்தவங்களா... காமராஜர் ஆண்ட மண்ணை காலி பண்ணிடீங்களே

Rate this:
Ramanathan Balakrishnan - chennai,இந்தியா
14-ஜன-201817:05:37 IST Report Abuse

Ramanathan Balakrishnanநெடுந்தூர பேருந்து பயணத்தில் இடையில் இருக்கும் சாலையோர உணவகங்களின் தரத்தை உயர்த்துங்கள். அங்குள்ள கழிப்பிடங்கள் சுகாதாரத்தை மேம்படுத்துங்கள். இவைகளுக்கு கட்டணங்களை பேருந்து கட்டணங்களுடன் சேர்த்து வசூலியுங்கள்

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
14-ஜன-201816:12:26 IST Report Abuse

Sahayamஎட்டப்ப ஆட்சி உடனடியாக பதவி விலக வேண்டும்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201813:54:12 IST Report Abuse

தமிழ்வேல் முதல்ல பஸ் ஆஸ்பத்திரி கட்டுங்க.. பஸ்ஸுங்க நிலைமையைப் பார்த்தா எப்போ படுத்துக்குமோன்னு இருக்கு. படுத்தா எழுந்திரிக்காது.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
14-ஜன-201812:33:56 IST Report Abuse

balakrishnanஇதுவரை சொன்ன திட்டங்கள் எதுவுமே செய்யவில்லை., இப்போது புதுசா பேச வந்துட்டாங்க, அதுவும் கோவை மாவட்டத்துக்கு திருப்பூர் மாவட்டத்துக்கு எதுவுமே இந்த ஆட்சியில் நடக்கவில்லை, இங்கே பி.ஜெ.பி கொஞ்சம் கண்ணில் தென்படுறாங்க அவர்களாவது ஏதாவது செய்வாங்கன்னு பாத்தா, நாங்க அடிதடியில் மட்டுமே கலந்துக்குவோம், இதுபோல நாட்டுக்கு நல்லது செய்யும் வேலைகள் எல்லாம் தெரியாதுன்னு ஒதுங்கிட்டாங்க, கிழக்கு புறவழிச்சாலை, மேற்கு புறவழிச்சாலை, உக்கடம் உயர்மட்ட மேம்பாலம், நகர பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், விமான நிலைய விரிவாக்கம், மொத்த காய்கறி மார்க்கட் இடமாற்றம், மல்டி லெவல் கார் பார்க்கிங் இவை அனைத்துமே அம்மா சொன்னது எதுவுமே நடக்கவில்லை, ஆட்சியை காப்பாற்றவே இவங்களுக்கு நேரம் போதவில்லை, இந்த லட்சணத்துல இவங்க தான் பஸ் போர்ட் அமைப்பாங்க, நம்பிட்டோம்,

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201812:29:36 IST Report Abuse

Kasimani Baskaranபாடாவதியான சாலைகளில் எப்படி இது போன்ற நவீன பேருந்துகள் ஓடும்?

Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201810:43:05 IST Report Abuse

R.PERUMALRAJAஅடுத்து வெயில் காலம் வருகிறது மின் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் , அவர்களை சமாதானப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று இப்பவே முன்னெச்சரிக்கை யுடன் இருப்பது நன்றே .....

Rate this:
rajan - kerala,இந்தியா
14-ஜன-201810:13:51 IST Report Abuse

rajanஇப்போ நேரம் சரியில்லே அதனாலே குட்கா ஊழல் மாஸ்டர்கள் எல்லாம் அமைதி காக்க வேண்டுமாம். அள்ளி போட்டு நொங்கெடுத்த அத்தனை உண்மையும் தானா கக்குவானுங்க இங்கே.

Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
14-ஜன-201809:49:18 IST Report Abuse

Makkal Enn pakamடேய் நீங்களயோ உங்கள் அமைச்சர்களோ சென்னையில் பேருந்து என்ற பெயரில் ஓடும் தகரடப்பாவில் ஒரு முறை தாம்பரம் முதல் பாரிஸ் வரை பயணம் செய்ய துணிவிருக்கிறதா?? செய்விர்களா? செய்விர்களா? செய்விர்களா?, இதை எவனாவது செய்துகாட்டினால் நீங்கள் தான் அடுத்த முதல்வர்...... இதயம் இல்லாத மனித பதர்கள் .....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201812:28:36 IST Report Abuse

Kasimani Baskaran"நீங்களயோ" - பொங்கல் அன்று தமிழை இப்படியா பொங்கல் வைப்பது?...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement