'உதய்' திட்டத்தால் தமிழகத்திற்கு தாராளம் ஓராண்டில் கிடைத்தது ரூ.26,471 கோடி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'உதய்' திட்டத்தால் தமிழகத்திற்கு தாராளம்
ஓராண்டில் கிடைத்தது ரூ.26,471 கோடி

உதய் திட்டத்தில், தமிழகம் இணைந்த ஓராண்டிற்குள், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், 26 ஆயிரத்து 471 கோடி ரூபாய் கடன் வழங்க, மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

'உதய்' திட்டத்தால் தமிழகத்திற்கு தாராளம் ஓராண்டில் கிடைத்தது ரூ.26,471 கோடி


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில மின் வாரியங்களின் நிதி நெருக்கடியை சரி செய்ய, 'உதய்' என்ற மின் திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தில், 'மாநில அரசுகள், மின் வாரிய கடனில், 75 சதவீதம் ஏற்க வேண்டும்; மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை மின் கட்டணம் மாற்ற வேண்டும்; எதிர்காலத்தில், மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்புகளை, மாநில அரசு ஈடுசெய்ய வேண்டும்' என்பது உட்பட, பல நிபந்தனைகள் இருந்தன.


அவற்றை தளர்த்துமாறு, தமிழகம் விடுத்த கோரிக்கையை, மத்திய மின் துறை ஏற்கவில்லை.
இதனால், அத்திட்டத்தில் தமிழகம் இணையவில்லை. , பின், கோரிக்கையை ஏற்றதால், 2017 ஜன., மாதம், உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்தது. இதையடுத்து, மத்திய நிதி நிறுவனங்களிடம் இருந்து, மின் வாரியத்திற்கு தொடர்ந்து தாரளாமாக நிதி உதவி கிடைக்கிறது.

அதன்படி, ஓராண்டிற்குள், 26 ஆயிரத்து 471 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க, மத்திய நிறுவனங்கள், மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய துணை மின் நிலையம், மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியத்திடம் நிதி இல்லை.

இதனால், அந்த நிதி, மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' ஆகிய நிறுவனங்களிடம் கடனாக வாங்கப்படும். உதய் திட்டத்தில் இணையாததால், அவை, கடன் வழங்க ஆர்வம்காட்டவில்லை.

பின், 2017 ஜன., மாதம், உதய் திட்டத்தில் இணைந்ததும், வட சென்னை புதிய அனல் மின் நிலையம்; விழுப்புரம், அரியலுார், 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு, 6,890

Advertisement

கோடி ரூபாய் கடன் வழங்க, அம்மாத இறுதியில், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்தது.
அதே ஆண்டு, மார்ச் மாதம், உப்பூர், சோலையாறு மின் நிலையங்கள்; எண்ணுாரில், 765 கி.வோ., துணை மின் நிலையங்கள் அமைக்க, பவர் பைனான்ஸ், 9,128 கோடி ரூபாய் கடன்வழங்க ஒப்பந்தம் செய்தது.

இந்நிறுவனம், 12ம் தேதி, உடன்குடி மின் திட்டத்திற்கு, 10 ஆயிரத்து 453 கோடி ரூபாய் கடன் வழங்க, ஒப்பந்தம் செய்துள்ளது. இரு நிறுவனங்களும், புதிய திட்டங்களுக்கு, தொடர்ந்து கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்து உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Madurai,இந்தியா
16-ஜன-201821:14:04 IST Report Abuse

Tamilஇந்தவிபரம் ஜெ க்கு தெரியலையா , தீய சக்திகள் தமிழ் நாட்டை சூழ்ந்துள்ளது

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
15-ஜன-201820:51:55 IST Report Abuse

venkateshஇவனுங்க கடன் வாங்கி அதில் முக்கால்வாசி தகையை வீட்டுக்கு கொண்டுபோய் விடுவானுங்க அப்புறம் நஷ்டம் சம்பளம் குடுக்க முடியல்ல ஓய்வுஊதியம் கொடுக்க முடியவில்லை என்று நஷ்டத்தை கூடி கொண்டே போவானுங்க திருட்டு பயல்கள்.

Rate this:
Ravi Chandhar - Coimbatore,இந்தியா
14-ஜன-201813:07:55 IST Report Abuse

Ravi Chandharகொடுக்கறது கடனு இதுல என்ன தாராளம் ??? கடனை யாரு கட்ட போறது மத்திய அரசாங்கமா இல்ல மாநில அரசாங்கமா??? எங்க தலையில தான விழப்போகுது

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201817:26:58 IST Report Abuse

தமிழ்வேல் நாமதான், வருஷத்துக்கு 4 ஆப்பு.....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201812:52:43 IST Report Abuse

Kasimani Baskaranசீக்கிரம் திவாலாக அதிக வாய்ப்பு இருக்கிறது...

Rate this:
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
14-ஜன-201810:32:05 IST Report Abuse

Chanemougam Ramachandiraneஉதய திட்டத்தில் புதுவை அரசுக்கு சேர்ந்து எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளார்கள் என்று தெளிவுபடுத்தவில்லை ஜெர்க் மீட்டிங்கில் இதை பற்றி வாய் திறக்கவில்லை அதிகாரிகள் மற்றும் கமிசினும்

Rate this:
14-ஜன-201809:29:25 IST Report Abuse

KrishnamoorthyAdani, reliance and Tata will grow with these plans. It will not get any revenue for TN government. Edappadi and pannerselvam are cheaters. They are not fit to rule this state.

Rate this:
14-ஜன-201817:44:03 IST Report Abuse

SathyanarayananSathyasekarenalways negative, if you have talent start a business and earn money, dont cry on somebody else success....

Rate this:
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
15-ஜன-201817:08:36 IST Report Abuse

Adhvikaa Adhvikaaஎதற்கு எடுத்தாலும் அதானி அம்பானி என்று புலம்புவது சரி அல்ல. உதய் திட்டத்தில் தமிழ்நாடு இணைந்த பிறகு முழு அளவில் மின்சாரத்தட்டுப்பாடு என்பது இல்லை. மேலும் இந்தியா இப்போது அண்டை நாடுகளுக்கு உபரி மின்சார விற்பனை செய்துவருகிறது. இதற்கு மத்திய அரசின் திரு பியூஷ் கோயல் என்ற அமைச்சரின் சிறப்பான செயல்பாடும் ஒரு முக்கியக் காரணம். எனவே வரவேற்கவேண்டிய இந்த திட்டத்தை எதிர்மறை சிந்தனையுடன் விமரிசிப்பது தவறு ....

Rate this:
14-ஜன-201809:27:14 IST Report Abuse

KrishnamoorthyUdhay plan is stupid and makes TN government to do bad things to public. Thats y jaya denied it. Now these idiots agreed to safeguard their positions. Amma is great.

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
14-ஜன-201808:59:45 IST Report Abuse

 ஈரோடுசிவாதாயும் ... புள்ளையும் ஒண்ணுன்னாலும் , வாயும் வயிரும் வேற தானுங்கோ ... ?

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-ஜன-201808:09:08 IST Report Abuse

ramasamy naickenThen why Jeya opposed it? Why the media did not expose her wrong decisions? Why all those stupid people opposing Vairamuthu for a useless matter kept their mouth shut?

Rate this:
MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ
14-ஜன-201807:07:28 IST Report Abuse

MALIKஅது என்னவோ போங்க, கரண்ட் கட் இல்லாம இருக்குதே .அதுவே பெரிய பலன்தான்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201817:19:56 IST Report Abuse

தமிழ்வேல் கரெக்ட். usa ல அப்புடிதான்... இங்க ரெண்டுவாரத்துக்கு முன்னால மெயின்டனன்ஸ்சுன்னு வேலைக்கு போற நேரத்துல 9 மணிக்கு கட் பண்ணி மாலை 5 மணிக்கு மேல கரண்ட் வந்துச்சு... எங்க வீட்ல எல்லாமே கரன்ட்லதான். கரண்ட் அடுப்புன்னா பாத்துக்கோங்களேன்.. அன்னைக்கு பூராவும் வெங்கடேஸ்வரா தான்.. வேலைக்கார அம்மாவுக்கு சம்பளத்தோடு லீவு....

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement