மூத்த அதிகாரிகளுக்கு ரயில்வே கிடுக்கிப்பிடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூத்த அதிகாரிகளுக்கு ரயில்வே கிடுக்கிப்பிடி

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மூத்த, அதிகாரிகள், ரயில்வே, கிடுக்கிப்பிடி

புதுடில்லி:'பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில், ரயில்வே மூத்த அதிகாரிகள், இரு வாரங்களுக்கு, இரு நாட்கள் வீதம் முகாமிட்டு, பணிகளை மேற்பார்வையிட வேண்டும்' என, ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.
அடுத்த நிதியாண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பழைய மற்றும் பழுதான வழித்தடங்களை மாற்ற, ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், கட்டுமானப் பிரிவு அதிகாரிகளுக்கு, ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதம்:
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நடக்கும், தண்டவாளம் புதுப்பித்தல், பால சீரமைப்பு, ஆளில்லா லெவல் கிராசிங்குகளை நீக்குதல், நடைமேடைகளை உயர்த்துதல் மற்றும் வழித்தட பராமரிப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில், துவக்கத்தில் ஒரு வாரமும், அதன்பின், 14 நாட்களுக்கு இரு நாட்கள் வீதமும், அதிகாரிகள் தங்கியிருந்து, அங்கு நடக்கும் திட்டப் பணிகளுக்கு தேவையான வழிமுறைகளை கூறி, செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagai Nagarajan Swaminathan - Chennai,இந்தியா
14-ஜன-201817:00:51 IST Report Abuse
Nagai Nagarajan Swaminathan அப்படிபோடு ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு பல லக்ஷம் சம்பளம் வாங்கிக்கொண்டு கீழ் அதிகாரிகளை விரட்டிக்கொண்டு காலம் கடத்திய உயர்மட்ட அதிகாரிகளுக்கு ரயில்வே வாரியம் ஆப்பு வைத்து விட்டது நல்லத்திற்கு தான்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஜன-201816:07:24 IST Report Abuse
Lion Drsekar இதற்க்கு முன்னால் ஒரு செய்தி இதேபோன்று தினமலரில் வெளிவந்தது அதாவது அனைத்து உயர் அதிகாரிகளும் இரண்டாவது வகுப்பில் பயணம் செய்து பொது மக்களோடு மக்களாக பயணிக்கவேண்டும் என்று?? அதுபோல்தான் இதுவும்,? நாட்டில் எப்படி அனைத்து நதிகளும் ஒன்றாக இனைந்து தற்போது விவசாயம் செழிக்கிறதோ , கங்கை சுத்தமாக ஓடுகிறதோ அதேபோல் எல்லாமே நடந்தால் நன்றாகத்தான் இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
14-ஜன-201814:47:56 IST Report Abuse
vnatarajan 2017 -2018 ம் நிதி யாண்டின் முடிவில் அரசாங்கத்திற்கு டாக்ஸ் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். அதை மக்களுக்கு பயன்பெற நல்ல முறையில் செலவழிப்பதற்குத்தான் இப்படிப்பட்ட திட்டங்களை பிஜேபி அரசு கொண்டுவருகிறது. ஆனால் அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை மேல்பார்வையிட சில அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அப்போதுதான் ரயில்வேயில் எதிர்பார்த்த ரிசல்ட்/ ப்ரொடக்டிவிட்டி கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை