திசை திருப்பும் முயற்சி!| Dinamalar

திசை திருப்பும் முயற்சி!

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

முக்கிய பிரச்னைகள் குறித்து சிந்திக்க விடாமல், மக்களின் கவனத்தை திசை திருப்புவதில், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு சிறப்பாக செயல்படுகிறது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் குற்றச்சாட்டு குறித்து மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக, அரசியல் தலைவர்களின் வீடுகளில், 'ரெய்டு' நடத்தப்படுகிறது.
அகிலேஷ் யாதவ்
உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி
பொய் வேஷம்!
கர்நாடகாவில், ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் முதல்வர் சித்தராமையா, எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. காங்., தலைமையிலான அரசு, ஹிந்துக்களுக்கு எதிரான அரசாக உள்ளது. ஒரு சார்பு நிலையுடன் செயல்படும் அவர்கள், மதச்சார்பின்மை பற்றி பேசுகின்றனர்.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,
ஜனநாயகம் எங்கே?
மக்கள் பிரச்னைகளுக்கு தீர்ப்பளிக்க வேண்டிய, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மக்கள் மன்றத்தில் தங்கள் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர். நாட்டின் நீதித் துறை எந்த அளவு சுதந்திரமாக செயல்படுகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த சூழலிலும், ஜனநாயகத்திற்கு ஆபத்து வராத வகையில், அரசு செயல்பட வேண்டும்.
யஷ்வந்த் சின்ஹா
மூத்த தலைவர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
14-ஜன-201810:30:29 IST Report Abuse
rajan.  இதுல என்னப்பா இருக்கு பெரிய அரசியல் தலைவர்களின் ஊழல் வீடுகளை ரைடு பண்ணி தானே இப்போ உள்ளே தள்ளி தண்டனை கொடுத்தாங்க. எங்கே உங்க அரசியல்வாதிங்க அத்தனை பேரும் மக்களுக்காக மட்டுமே உழைத்தவர்கள் என உன்னாலே சொல்லமுடியுமா முடியாதுல்லே. ஆனா உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களாகிய எங்களுக்கு சொல்ல முடியும் இந்த போக்கிரி ராஜாக்களை பற்றி. அதனாலே இனியாச்சும் தெளிவா மாத்தியோசிங்கப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X