'டாப் ஸ்டேஷனில்' குவிந்த சுற்றுலா பயணியர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டாப் ஸ்டேஷனில்' குவிந்த சுற்றுலா பயணியர்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'டாப் ஸ்டேஷனில்' ,குவிந்த, சுற்றுலா, பயணியர்

மூணாறு:மூணாறு அருகே, தமிழகத்தின் கடைக்கோடி மலைக் கிராமமான, 'டாப் ஸ்டேஷனில்' இயற்கை அழகை ரசிக்க, சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.மூணாறு அருகில் உள்ள, 'டாப் ஸ்டேஷன்' பகுதி, தேனி மாவட்டம், கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது.
அப்பகுதியில் நிலவும் இதமான காலநிலையையும், அடிக்கடி சூழும் மேகக் கூட்டங்கள் உரசி செல்லும் போது ஏற்படும் சிலிர்ப்பையும் அனுபவிக்க, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் உட்பட, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்வர்.
பொங்கல் விடுமுறையால், மூணாறுக்கு தமிழக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அது போல, டாப் ஸ்டேஷனிலும் இயற்கை அழகை ரசிக்கின்றனர். அங்கிருந்து, தேனியின் மற்ற பகுதிகளை பார்த்து ரசிக்க, தமிழக வனத்துறை சார்பில், 'வாட்ச் டவர்' அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை