காணும் பொங்கலுக்கு 5,000 போலீசார் பாதுகாப்பு சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காணும் பொங்கலுக்கு 5,000 போலீசார் பாதுகாப்பு சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 காணும் பொங்கலுக்கு, 5,000 போலீசார், பாதுகாப்பு,சென்னை கமிஷனர் ,ஏ.கே.விஸ்வநாதன், தகவல்

சென்னை:''சென்னையில், காணும் பொங்கலையொட்டி, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்,'' என, மாநகர போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.
சென்னை, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ஜெயராமன், சுதாகர் உள்ளிட்ட உயரதிகாரிகள், காவலர் குடும்பங்களுடன், பொங்கல் விழாவை நேற்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், உறியடி, கோலப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பரிசு வழங்கி கவுரவித்தார்.
மகிழ்ச்சி
கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:காவலர் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும். காணும் பொங்கலையொட்டி, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், மக்கள் கூடும் இடங்களில், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்களில், அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மெரினாவில், அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதால், காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் உதவி மையம் தற்காலிகமாக துவங்கப்பட்டுள்ளன. இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில், மருத்துவக் குழுவினர் நிறுத்தப்பட உள்ளனர். கண்காணிப்பு கோபுரங்கள் வழியாக, மெரினா முழுவதுமாக கண்காணிக்கப்பட உள்ளது.
மெரினாவில், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவரை கட்டுப்படுத்த, குதிரைப்படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அறிவுரை
மணல் பரப்பில் செல்லக்கூடிய வாகனங்களும், தயார் நிலையில் உள்ளன. வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து, அவ்வப்போது பாதுகாப்பு குறித்து, போலீசார் அறிவுரை வழங்க உள்ளனர்.மேலும், 100க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்களும், வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பர். இதேபோல், பெசன்ட் நகர் கடற்கரையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துண்டு சீட்டு
கடற்கரைக்கு வரும் குழந்தைகள், நெரிசலில் தவறுவதை தடுக்க, குழந்தையின் பெயர், தந்தையின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் போன்ற விபரம் அடங்கிய துண்டு சீட்டை, குழந்தையின் கையில் கட்டி அனுப்ப, போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X