delhi ush | நீதிபதிகள் போர்க்கொடி: பின்னணி என்ன?| Dinamalar

நீதிபதிகள் போர்க்கொடி: பின்னணி என்ன?

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 டில்லி உஷ், உச்சநீதிமன்றம், தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், ஜனாதிபதி, ராம்நாத், கவர்னர், பன்வாரிலால், delhi ush

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர், திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே, இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை.'இரு மாதங்களுக்கு முன், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினோம். நீதிமன்ற விதிகளுக்கு புறம்பாக, அவர் நடந்து கொள்கிறார் என, அந்த கடிதத்தில் சொல்லி இருந்தோம்' என்றனர். ஆனால், அந்த கடிதத்தில், அப்படி எதுவும் புயலை கிளப்பும் விஷயமே இல்லை.அனைத்து, 'மீடியா'க்களும் இந்த செய்திகளை பரபரப்பாக்கின. இதனால், 'நீதிமன்றம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு, இந்த நான்கு நீதிபதிகளும் சமாதி கட்டி விட்டனர்' என, நீதிபதிகள் மத்தியில் பேசப்படுகிறது.பத்திரிகையாளர்களை, இவர்கள் சந்தித்ததற்கான காரணம் குறித்து, நீதித் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: '2ஜி' வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, ராஜா குற்றவாளி இல்லை என, சொல்லி விட்டாலும், இது தொடர்பான மற்றொரு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில், தி.மு.க., அல்லாத வேறு சில தமிழக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி, மிஸ்ராவிடம் வந்த போது தான், 'டில்லி உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கை நான் விசாரித்தேன். அதனால், தற்போது இந்த வழக்கை, நான் விசாரிக்க முடியாது' எனக் கூறி, வேறு இரண்டு நீதிபதிகள் அமர்விற்கு மாற்றி விட்டார்.இந்த அமர்வு, அரசுக்கு சாதகமாக செயல்படும் என, பயந்து போன, அந்த அரசியல் கட்சியின் தலைவர்களில் சிலர் தான், இந்த நீதிபதிகளின் எதிர்ப்பிற்கு பின்னால் உள்ளதாக தெரிகிறது.இந்த அமர்வு விசாரித்தால், நிச்சயம் வழக்கு தங்களுக்கு எதிராக போகும்; எனவே, முக்கிய வழக்குகளை தலைமை நீதிபதி, ஜூனியர் நீதிபதிகளிடம் தள்ளி விடுகிறார் என, புகார் கூறி, தலைமை நீதிபதிக்கு எதிராக, அந்த நீதிபதிகளை, குறிப்பிட்ட கட்சியினர் துாண்டி விட்டனர். நீதிபதி, சலமேஸ்வர், தான் தலைமை நீதிபதி ஆக முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், தீபக் மிஸ்ராவிற்கு எதிராக செயல்படுவதால், இது தான் சமயம் என, தனக்கு ஆதரவாக மற்ற நீதிபதிகளையும் சேர்த்து கொண்டார்.அக்டோபரில், தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுகிறார். அடுத்ததாக, ரஞ்சன் கோகோய், தலைமை நீதிபதியாக பதவியேற்பார். இந்த கோகோயும், மிஸ்ராவிற்கு எதிராக குரல் கொடுத்த நான்கு நீதிபதிகளில் ஒருவர். இவர் தலைமை நீதிபதியானால், இவரது பதவிக்காலத்தில் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த ரஞ்சன் கோகோயின் தந்தை, கேசப் சந்திர கோகோய், காங்கிரசைச் சார்ந்தவர்; அசாம் முதல்வராக இருந்தவர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தமிழக கவர்னருக்குஜனாதிபதி, 'அட்வைஸ்'

சமீபத்தில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், டில்லியில், ஜனாதிபதியை சந்தித்தார். தமிழக அரசியலில் நடக்கும் சம்பவங்கள், ரஜினி அரசியல் பிரவேசம், அ.தி.மு.க., உட்கட்சி பூசல் என, பல விஷயங்கள் இந்த சந்திப்பின் போது அலசப்பட்டன. 'தமிழகத்தில், உங்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக கேள்விப்பட்டேனே' என, ஜனாதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். உடனே, கவர்னர், 'தமிழகத்தின் பல இடங்களுக்கு சென்று, அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன; இவை, மக்களுக்கு ஒழுங்காக சென்று சேருகின்றனவா என, ஆய்வு செய்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகள் இதை குறைகூறி வருகின்றன' என்றார்.உடனே, ஜனாதிபதி, 'நீங்கள் ஆய்வு செய்வதில் தவறில்லை. ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள, எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் அமைச்சர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள்; அது தான் நல்லது' என, அறிவுரை வழங்கினார்.தமிழக அரசு தரப்பிலிருந்து, 'கவர்னர் ஆய்வு செய்வதில், எங்களுக்கு பிரச்னை எதுவுமில்லை; சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கவர்னர் செல்லும் ஊர்களுக்கு சென்று உதவி வருகின்றனர்' என, பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
23-ஜன-201806:44:33 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> yaarukandaa ithukalukkum sambalamporaleeyo ennavocost of lib=ving avlo mosamaairukke
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
16-ஜன-201820:47:28 IST Report Abuse
தாமரை இந்த நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு கண்டிப்பாக கம்யூனிஸ்ட்டுகள் பின்னணி இருக்க வேண்டும். ஏனெனில் ஜனநாயக அமைப்புக்களை கேலிப்பொருளாக்குவதில் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒரு அலாதி பிரியம். மேலும் காங்கிரசும் இவர்களுக்கு ஆதரவுக்கு கரம் நீட்டுகிறது. தேசம் எக்கேடு கேட்டாலும் காங்கிரஸாருக்குப் பதவி ஒன்றுதான் குறி. மேலும் பாகிஸ்தான், சீன பின்னணியும் இருக்க வாய்ப்பு அதிகம். தீர விசாரித்தால் இந்த உண்மை வெளிப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
15-ஜன-201820:06:53 IST Report Abuse
Bebeto பசி தான் இந்த நீதிபதிகளை தூண்டி விடுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X