சபரிமலையில் இன்று மகர ஜோதி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் இன்று மகர ஜோதி

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சபரிமலையில்,  இன்று, மகர ஜோதி

சபரிமலை:கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மகர விளக்கு பெருவிழா நடக்கிறது.
பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திரு ஆபரண பவனி, இன்று மாலை, சரங்குத்தி வந்தடையும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் வரவேற்று, சன்னிதானத்துக்கு அவற்றை கொண்டு வருவர். மாலை, 6:25 மணிக்கு, தந்திரியும், மேல்சாந்தியும் ஆபரணத்தை பெற்று, அய்யப்பனுக்கு அணிவிப்பர்.
இதை தொடர்ந்து, நடை திறக்கப்பட்டு, தீபாராதனை நடக்கும். சில நிமிடங்களில், பொன்னம்பலமேட்டில், மகர நட்சத்திரம் காட்சி தரும்; தொடர்ந்து, மகர ஜோதி மூன்று முறை காட்சி தரும்.சூரியன், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும், மதியம், 1:47- மணிக்கு, அய்யப்பனுக்கு மகர சங்கரம பூஜை செய்யப்படும். இதில், திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான, கவடியாரில் இருந்து, அய்யப்பனுக்கான அபிஷேக நெய் கொண்டு வரப்படும். நெய் தேங்காய் உடைக்கப்பட்டு, பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக அபிஷேகம் செய்யப்படும்.
இரு நாட்களாக, இங்கு வந்த பக்தர்களில் பெரும்பாலானோர், ஜோதி தரிசனத்துக்காக, சன்னிதானத்தை சுற்றியுள்ள காடுகளில், கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். கட்டடம், மரம், மலைச் சரிவுகளில் நின்று, ஜோதி தரிசனம் பார்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று மதியம், 12:00 மணி முதல், வடசேரிக்கரையில் இருந்து, வாகனங்கள் பம்பைக்கு அனுமதிக்கப்படாது. மகர விளக்கு முடிந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கையை பொறுத்து, பம்பைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar.S -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201814:18:10 IST Report Abuse
Sekar.S Swamiye Saranam Ayyappa
Rate this:
Share this comment
Cancel
Sekar.S. -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201814:17:24 IST Report Abuse
Sekar.S. Swamiye Saranam Ayyappa.
Rate this:
Share this comment
Cancel
Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா
14-ஜன-201814:01:00 IST Report Abuse
Siva Rama Krishnanan காந்த மலைக்கு அப்பால் கொஞ்ச தூரம் தமிழ் நாடு . ஸ்ரீ வில்லி புத்தூர் to சபரி மலை எவ்வளவு தூரம்? அங்கிருந்து நேராக ரோடு போட்டால் பயண செலவு தூரம் மிச்சமாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை