இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 இலங்கை, துறைமுகம், மேம்படுத்த,  ரூ.294 கோடி , இந்தியா நிதி உதவி

புதுடில்லி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான 'எக்சிம்' வங்கியின் நிர்வாக இயக்குனர் டேவிட் ரஸ்குயின்ஹா, இலங்கை நிதி அமைச்சகத்தின் கருவூல செயலாளர் சமரதுங்கா இருவரும் சமீபத்தில் டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது இந்தியா-இலங்கை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்படி, இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூ.294 கோடி நிதி உதவியாக அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தை முழுமையான வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும், பிராந்திய கடற்பகுதி துறைமுகங்களில் காங்கேசன்துறை துறைமுகத்தை இணைக்கும் விதமாக இந்த உதவியை இந்தியா அளிக்க முன்வந்துள்ளது.

இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது' என்று கூறப்பட்டு உள்ளது.காங்கேசன்துறை துறைமுகம் மேம்படுத்தப்படும்போது, யாழ்ப்பாண தீபகற்பம் உள்ளிட்ட இலங்கையின் இதர பகுதிகளையும், இந்தியாவையும் இணைக்கும் விதமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadma - Chennai,இந்தியா
14-ஜன-201818:17:18 IST Report Abuse
Sadma அதானிக்கு இன்னுமொரு துறைமுகம்...... அப்படித்தானே ???
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201817:16:23 IST Report Abuse
Pugazh V இலங்கை ராமர் பாலத்தின் மேலயே துறைமுகம் கட்டினா என்ன பண்ணுவீங்க?
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-ஜன-201820:26:33 IST Report Abuse
jaganஎதுனா செஞ்ச மொத்த ராமர் பாலத்தையும் நாங்க எடுத்துக்க ரொம்ப நேரம் ஆகாது...அவனுக்கும் அது தெரியும்...சிங்களவனும் ஒரிசா காரனே , அவனுக்கும் அந்த முக்கியத்துவம் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201814:44:47 IST Report Abuse
Pugazh V என்னவோ இலங்கை தமிழர் களை கொத்து கொத்தாக கொன்ற இலங்கை அரசுடன் திமுக உறவாடுதுன்னெல்லாம் புலம்பின பிஜேபி மூர்க்கன் கள் இப்போது மூஞ்சிய எங்க கொண்டு போய் வெச்சுப்பாங்க
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201814:42:41 IST Report Abuse
Pugazh V வழக்கம் போல தேசநாசன் என்கிற காவித் தீவிர வாதி, என்னவோ பிதற்றி இருக்கிறார்.. இலங்கை அரசு இந்திய கான்ட்ராக்ட்டருக்கா ஆர்டர் குடுக்குமா ? அவங்க என்ன அவ்ளோ டுபுக்கு களா...இல்ல்ல... அவ்ளோ டுபுக்கு களா ன்னு கேக்கறேன்
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
14-ஜன-201814:05:01 IST Report Abuse
vnatarajan இந்தியாவின் நிதி உதவி எண்ணம் நல்ல எண்ணம் தான். இதேபோல் நம் மீனவர்களை கச்ச தீவின் அருகில் சில கண்டிஷனோட மீன் பிடிக்கவும் இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும். இதற்கு மத்திய அரசாங்கம் முயற்சி எடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201814:29:09 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல பதிவு......
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201813:56:44 IST Report Abuse
தமிழ்வேல் தூத்துக்குடி ?
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
14-ஜன-201813:41:35 IST Report Abuse
rama தமிழ் நாட்டு மீனவர்களை காக்க வக்கு இல்லாத இந்தியா, இலங்கைக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா இதிலிருந்து இநதியா யாருக்கு நட்பு நாடு தெரிந்து கொள்ளுங்கள் பாஜக அடிமைகள்
Rate this:
Share this comment
Cancel
anbu - Coimbatore,இந்தியா
14-ஜன-201813:09:33 IST Report Abuse
anbu சாமிக்கு சைக்கிள் ஆனால் பூசாரிக்கு புல்லட்டா?
Rate this:
Share this comment
Cancel
YesJay - Chennai,இந்தியா
14-ஜன-201812:49:30 IST Report Abuse
YesJay Hope the Tuticorin and Chennai harbors are expanded using similar schemes. That will improve TN's ability to export our produce
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201812:07:05 IST Report Abuse
செம்பியன் தமிழ்வேள் சோழபாண்டியர் காலத்தில் இதே காங்கேசன் துறை வழியாக இலங்கை சோழருக்கும் பாண்டியருக்கு கீழாக அடிபணிய செய்யப்பட்டது. இன்று அதே காங்கேசன் துறை சீனன் இந்தியாவுக்குள் நுழைய வழி திறக்கும் போல. .வரலாற்றின் தலைகீழ் திருப்பம்...நமது செலவில் சீர் செய்யப்படும் காங்கேசன் துறை, பின்பு நம்மையே தாக்க சீனனுக்கு வழிகோலும் துறைமுகமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை