இன்றைய காப்புக்கட்டு உலகை காக்கும் - தற்காப்பு , பாதுகாப்பு: மகரிஷி பரஞ்சோதியார் உரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய காப்புக்கட்டு உலகை காக்கும் - தற்காப்பு , பாதுகாப்பு: மகரிஷி பரஞ்சோதியார் உரை

Added : ஜன 14, 2018
Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பரஞ்சோதி நகர் ஞான பீடத்தில் சர்வ தேச மெய்யுணர்வாளர்களால், மகர சங்கராந்தி, போகிப் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காப்புக் கட்டு நிகழ்ச்சியில் உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்சோதியார் உரையாற்றுகையில், இன்று இங்கே கட்டுகின்ற காப்பு இல்லங்களை மட்டுமல்ல,உலகத்தைக் காப்பாற்றுகின்ற, எல்லா நாடுகளையும் , கண்டங்களையும் , எல்லோரையும் காக்கின்ற காப்பு. தற் காப்பு. பாது காப்பு . இயற்கைச் சீற்றங்கள் இல்லாமலிருக்க காப்பு என்றார்.

அவர் மேலும் பேசுகையில் தத்துவம் வேறு- வாழ்க்கை வேறு அல்ல. ஐந்து புலன்களால் அனுபவிப்பது போகம். ஆறாவது அறிவால் அறிவது யோகம். உடல் காப்பு, உளக் காப்பு, உயிர்க் காப்பு. மஞ்சள் மங்கலகரமானது. ஆவாரம் பூ மஞ்சள். ஆவாரை இருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பது பழமொழி .ஆவாரம் பூ உயிர்க் காப்பு. வேம்பு உடல் காப்பு. பூளைப்பூ உளக்காப்பு. இந்த மூன்று காப்போடு மனித குலம் வாழ வேண்டும்.


சூரியனைக் கொண்டாடும் நாள்நாளை ( தை 1) ஒளி நாள். சூரியனைக் கொண்டாடும் நாள். நன்றி கூறும் அற்புத நாள். நமது முன்னோர் இயற்கையை வழிபட்டார்கள். கடவுள் என்பது ஒளி. அந்த ஒளிக்கடவுளுக்கு நன்றி கூறும் நாள். எல்லா உயிர்களின் சார்பாக மனிதன் நன்றி கூறுகிற நாள். தை பிறந்தால் வழி பிறக்கும். இனி நல்லதே நடக்கும். போகிப் பண்டிகையின் போது அனைத்தையும் , விறுப்பு,வெறுப்பு, கோபம் , அதிருப்தி அனைத்தையும் எரித்து விடுங்கள்.

நமது முன்னோர் பல சடங்குகளைக் கொண்டிருந்தனர்.அவைகளில் பொருள் பொதிந்திருந்தது. அந்த சடங்குகளைக் காப்பாற்றினால் சம்பிரதாயங்கள் காப்பாற்றப்படும். நம்முடைய தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராயப்பட்டு சூப்பர் பிரைன் யோகாவாகப் போற்றப்படுகிறது. உயிருக்கு உண்டான பயிற்சியே தியானம். தன்னை அறிவதே உண்மையான தியானம். உலகம் முழுவதும் இந்த தியானம் பரவினால் தியான உலகமாகி விடுகிறது. தியானத்தால் வளம் உண்டாகும்.அதனால் சந்தோசம் கிடைக்கிறது.

இந்த போகிப் பண்டிகை நாளில் எல்லோரும் எல்லாம் பெற்று வளமும் நலமும் மகிழ்வும் நிறைவும் பெறவும், வையகம் சாந்தியும் சமாதானமும் சந்தோசமும் அடையவும், பசியற்ற - பகையற்ற - பிணியற்ற நிலை பெற்ற சந்தோச உலகம் மலரவும் பரிபூரண நல்லாசிகள்” என்ற அருளாசியோடு உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வில் அறங்காவலர்கள் கே. விநாயகம் , திருச்சி சுப்பிரமணியம், பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை