செங்கோட்டையில்ஆற்றுக்குள் பாய்ந்த கார்:8 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கோட்டையில்ஆற்றுக்குள் பாய்ந்த கார்:8 பேர் காயம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:செங்கோட்டையில் குண்டாற்று பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கார் ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் 8 பேர் காயமுற்றனர்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாலயத்தோடு, நேஷனல் நகரை சேர்ந்த சப்னா குடும்பத்தினர், நெல்லை மாவட்டம் பொட்டல்புதுாரில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்திருந்தனர்.பின்னர் கேரளா கிளம்பினர். செங்கோட்டை, குண்டாறு பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டூவீலர், சைக்கிள் ஓட்டி வந்தோர் மீது மோதியது.அப்போது நிலைதடுமாறி கார் குண்டாறு பாலத்தின் தடுப்புசுவரை தாண்டி ஆற்றுக்குள் விழுந்தது. இதில் காரை ஓட்டிய ஷாகஸ் 27, சப்னா 35, முபீனா 28, அல்அமீன் 9, அப்சல் 34, சைக்கிளில் சென்ற செங்கோட்டையைச் சேர்ந்த மாரியப்பன் 58, டூவீலரில் சென்ற கொட்டாகுளத்தைச் சேர்ந்த பொன்னையா 60, அவரது மனைவி கல்யாணி 56 ஆகியோர் படுகாயமுற்றனர். சிகிச்சைக்காக தென்காசி மற்றும் செங்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். செங்கோட்டை போலீசார் விசாரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை