ரேஷன் அரிசி கடத்திய ஆசாமி தடுப்பு காவல் சட்டத்தில் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்திய ஆசாமி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவரை, தடுப்பு காவல் சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

பவானி அருகே, பவானி -மேட்டூர் சாலை, தேவராஜ்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் கருணாகரன், 49; கூட்டாளிகளுடன் சேர்ந்து, சுடுகாடு பகுதியில், 15 குவிண்டால் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தார். கடந்த மாதம், 19ல் ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்துக்கு கடத்த, மூன்று ஆம்னி வேன்கள், ஒரு பொலிரோ பிக்அப் வண்டியில் ஏற்றினார். குடிமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கருணாகரன், கூட்டாளி பிரபாகரனை கைது செய்தனர். மற்றவர்கள் தப்பினர். ஏற்கனவே, ரேஷன் அரிசி கடத்தியது, பதுக்கியது தொடர்பாக, கருணாகரன் மீது, இரண்டு வழக்கு உள்ளது. இதனால் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, இன்ஸ்பெக்டர் ரவி, ஈரோடு கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் ஏற்கவே, தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில், கருணாகரன் அடைக்கப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை