சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா: கத்தி போட்டு வீர குமாரர்கள் ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா: கத்தி போட்டு வீர குமாரர்கள் ஊர்வலம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புன்செய்புளியம்பட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கத்தி போடும் விழா நடந்தது.

புன்செய்புளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் பொங்கல் விழா நடப்பது வழக்கம். மூன்று நாட்கள் நடக்கும், விழா நேற்று தொடங்கியது. இதில் மாலை, 5:30 மணிக்கு கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறுவர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள் கத்தி போட்டு ஊர் வலமாக சென்றனர். சிறுமி கள் தீர்த்தக்குடம் சுமந்து வந்தனர். சக்தி அழைத்தல் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும், பக்தர்கள் பூஜை செய்து, ஊர்வலத்தை வரவேற்றனர். இன்று காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், மதியம், 1:00 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. நாளை காலை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை