ஈரோடு: ஈரோட்டில், 11 வது ஆண்டாக, ஈரோடு - பெருந்துறை சாலை, சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகை சாலையில், ஏற்றுமதி தரம் வாய்ந்த டெம்டேசன் பிராண்டட் பனியன் நிறுவன கண்காட்சி நடந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உற்பத்தி விலைக்கே, பனியன், டி - சர்ட்டுகள் விற்கப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏராளமான மாடல்களில் குவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை ஒட்டி நடக்கும் இக்கண்காட்சி, நாளையுடன் முடிவடைதாக, டெம்டேசன் பனியன் மேலாளர் தெரிவித்தார்.