வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: வரத்து அதிகரிப்பால், காய்கறி விலை குறைந்து, மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, தாளவாடி, அந்தியூர், சத்தி, கோபி உள்ளிட்ட மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்தும், காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், பருவமழை சராசரியாக பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும், காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்து, மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தலா, 50 ரூபாய், கத்தரிக்காய், 20, பீன்ஸ், 25, அவரைக்காய், 20, பச்சை மிளகாய், 20, கேரட், 50, பாகற்காய், 20, முட்டைக்கோஸ், 15 முதல், 20, ஊட்டி உருளை, 30, சாதா உருளை, 20, வெண்டைக்காய், 20, புடலங்காய், 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த சில மாதங்களை ஒப்பிடும்போது, காய்கறி விலை, 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக, நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள், சற்றே சோகத்துடன் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை