பாரியூரில் நிலை சேர்ந்த தேர்: 5,000 பக்தர்கள் குவிந்தனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரியூரில் நிலை சேர்ந்த தேர்: 5,000 பக்தர்கள் குவிந்தனர்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், தேர் நிலை சேர்த்தல் விழா, கோலாகலமாக நடந்தது. பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பூ மிதிக்கும் நிகழ்வு கடந்த, 11ல் நடந்தது. தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அம்மன் கோவிலில் துவங்கிய தேரோட்டம், பெருமாள் கோவில் வீதி வழியாக சென்று, அமரபணீஸ்வரர் கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. முக்கியஸ்தர்கள் முன்னிலையில், தேர்நிலைக்கூடத்தில், நிலை சேர்க்க இரு தேர்களும் நேற்று மாலை, 4:30 மணிக்கு வடம் பிடித்து இழுத்தனர். அம்மன் மற்றும் விநாயகர் என இரு தேர்களும், தேர்நிலை கூடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. பின், கோவில் ராஜகோபுரம் வரை வரிசையாக நின்ற பக்தர்கள், குண்டத்தில் மிளகு கலந்த உப்புக்கற்கள் கொட்டி, அம்மனை தரிசித்தனர். விழாவில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை, மலர் பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை