கோவில் விவகாரத்தில் முறைகேடு புகார்: ரயில்வே அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் விவகாரத்தில் முறைகேடு புகார்: ரயில்வே அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: புகார்களின் அடிப்படையில், ஈரோடு ரயில்வே அதிகாரிகள் நான்கு பேர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஈரோடு எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட் சீனியர் செக்ஷென் இன்ஜினியர் பாண்டியன். ஈரோடு ரயில்வே காலனி, சாய்பாபா கோவில் கமிட்டி தலைவராக உள்ளார். எஸ்.ஆர்.எம்.யூ., கோட்ட தலைவராக இருந்தவர். சங்கத்தில் ஏற்பட்ட பிரச்னையால், சில மாதங்களுக்கு முன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சங்க பொறுப்பில் நீக்கம்: ஈரோடு ரயில்வே பார்சல் அலுவலக அதிகாரி பாலசுப்பிர மணியம். ஈரோடு சீனியர் செக்?ஷன் இன்ஜினியர் (டி.ஆர்.டி., பிரிவு) ஹரிஹரன். ஈரோடு ரயில் பெட்டி பராமரிப்பு பிரிவு தொழில்நுட்ப அலுவலர் பாபு. இம்மூவரும் எஸ்.ஆர்.எம்.யூ., சங்கத்தில் கிளை செயலாளர்களாக செயல்பட்டவர்கள். ஒழுங்கு நடவடிக்கைக்காக, மூவரும் சங்க பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

முறைகேடு புகார்: மூவரும், ஈரோடு சாய்பாபா கோவில் கமிட்டி நிர்வாகிகள். சாய்பாபா கோவில் நிர்வாகம், கணக்கு, வரவு - செலவு தொடர்பாக பல்வேறு புகார்களை, மக்கள், ரயில்வே தொழிலாளர்கள் எழுப்பினர். சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கும், புகார் அனுப்பினர். இதன் தொடர்ச்சியாகவே, சில மாதங்களுக்கு முன், சாய்பாபா கோவில் அன்னதான கூடம் இடிப்பு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கோவில் கமிட்டி குறித்த பட்டியல் சேகரிப்பு பணிகளில், ரயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டியது.

அதிகாரி அதிரடி: இந்நிலையில் பல்வேறு புகார்கள் இருப்பதை காரணம் காட்டி, பாண்டியன், பாலசுப்பிர மணியன், ஹரிஹரன், பாபு ஆகிய நால்வரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து, சேலம் ரயில்வே கோட்ட உதவி மேலாளர் சந்தர்பால், உத்தரவிட்டுள்ளார். சாய்பாபா கோவில் விவகாரத்தில், நான்கு பேரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையை பக்தர்கள், ரயில்வே தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈரோடுசிவா - erode ,இந்தியா
15-ஜன-201803:17:25 IST Report Abuse
 ஈரோடுசிவா தவறு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம் ... அதற்கு ஏன் கோயில் அன்னதானகூடத்தை இடிக்க வேண்டும் ... குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் ... ? இதில் மாற்று மத ரயில்வே ஊழியர்கள் பங்கு இருக்கிறது என்று கேள்வி படுகிறோம் ... அடிநிலம் வேண்டுமானால் ரயில்வேக்கு சொந்தமாக இருக்கலாம் ... ஆனால் , ஏறக்குறைய ஒருகோடி ரூபாய் மதிப்பில் கோயில் கட்டியது பக்தர்கள் நன்கொடையாகும் ... முறைகேடு நடந்தால் கமிட்டி மெம்பர்கள் மற்றும் பக்தர்கள் பார்த்து கொள்வார்கள் ... ரயில்வே நிர்வாகம் எப்படி கோயிலை இடிக்கலாம் ... ? நாளுக்குநாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம் கண்டு வயிற்றெரிச்சல் கொண்ட சிறுபான்மை ஊழியர்கள் சதிதான் இதற்கு பின்னணியில் இருப்பது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X