பண்டிகை, பனி; எகிறியது பூ விலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்டிகை, பனி; எகிறியது பூ விலை

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: பொங்கல் பண்டிகை, பனிப்பொழிவால், பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஈரோட்டுக்கு சத்தி, அந்தியூர் பகுதிகள் மற்றும் திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும், விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்படுகிறது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே, 50க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை பூக்கடைகள் உள்ளன. இங்கிருந்து ஈரோடு மாநகர், சுற்றுப்பகுதி சிறு பூ வியாபாரிகள், மக்கள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். தற்போது கடும் பனிப்பொழிவால், பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு, 500 கிலோ முதல், 1,000 கிலோ வரை வரும் நிலையில், 50 முதல், 100 கிலோ வரை மட்டுமே வருகிறது. இதனால் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன் ஈரோட்டில், 700 முதல், 900 ரூபாய் வரை விற்ற, ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது, 1,400 ரூபாயாக உயர்ந்துள்ளது. பொங்கல் என்பதால், விலையை பொருட்படுத்தாமல், வழக்கம்போல் வாங்கிச் செல்கின்றனர். மல்லிகைப் பூ மட்டுமின்றி மற்ற பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. முல்லைப்பூ ஒரு கிலோ, 1,000 ரூபாய், சாதிமல்லி, 600, காக்கட்டான், 700, அரளிப்பூ, 150, சம்பங்கி, 120, ரோஜா, 120, மருகு, 100, கோழிக்கொண்டை, 40, செவ்வந்தி, 120 ரூபாய்க்கு விற்றதாக, மொத்த பூ வியாபாரிகள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை