மீட்டர் கட்டண ஆட்டோ இயக்கம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீட்டர் கட்டண ஆட்டோ இயக்கம் துவக்கம்

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: மீட்டர் கட்டண ஆட்டோ இயக்கம், ஈரோட்டில் அமலுக்கு வந்தது. மீட்டர் கட்டணத்துடன் ஆட்டோ, இயக்கும் முறை ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று துவங்கியது. போக்குவரத்து டி.எஸ்.பி., சேகர் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: முதற்கட்டமாக, 30 ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. பிற ஆட்டோக்களில், படிப்படியாக மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது மக்களுக்கு லாபகரமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் பேசியதாவது: தற்போது, 1.8 கி.மீ.,க்கு குறைந்தபட்ச கட்டணம், 25 ரூபாய், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா, 12 ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்டுப்படியாகாது; மாற்றி அமைக்க வேண்டும். குறைந்தபட்சம், 35 ரூபாய், ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா, 15 கட்டணம் நிர்ணயிக்க, அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
14-ஜன-201817:07:18 IST Report Abuse
K.Palanivelu ஈரோட்டில் ஆட்டோ ஓடத்துவங்கிய காலத்திலிருந்து கட்டணம் கட்டுபடியாகாது என்றே ஓட்டுனர்கள் கூறிவருகின்றனர்.பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்றும், திரும்பிவர சவாரி கிடைக்காது என்றுமே கூறிவருகின்றனர்.இவர்களை யாரும் திருத்தமுடியாது. என்னவோ பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை