ஓய்வெடுக்க இடமே இல்லையா? பதுங்கி தூங்கிய 'ஜீவன்' சிக்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வெடுக்க இடமே இல்லையா? பதுங்கி தூங்கிய 'ஜீவன்' சிக்கியது

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெருந்துறை: வாஷிங்மெசினில் ஓய்வெடுத்த 'ஜீவனை', தீயணைப்புத்துறையினர் பிடித்தனர். பெருந்துறை, சேனடோரியம், ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் எட்வின் பிரசாத், 38; இவர் மனைவி, நேற்று மதியம் துணிகளைத் துவைக்க, வாஷிங்மெசினை திறந்துள்ளார். துணிகளை அப்படியே போடாமல், எட்டிப் பார்த்தபோது, உள்ளே பாம்பு சுருண்டு படுத்திருந்தது. குலைநடுங்கிப்போன அவர் தந்த தகவலின்படி, பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். உல்லசாமாக ஓய்வெடுத்த, ஆறு அடி நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். அதே பகுதியில் உள்ள சேனடோரியம் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். வாஷிங்மெசினில் பாம்பு புகுந்தது எப்படி? எனத் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை