8 கோவிலுக்கு வருவாய்த்துறை 'சீல்' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8 கோவிலுக்கு வருவாய்த்துறை 'சீல்'

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: திருவிழா நடத்துவதில், இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், எட்டு கோவில்களுக்கு, வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

நாமக்கல் அடுத்த, தும்மங்குறிச்சி மேலப்பட்டி மேல்முகம் கிராமத்தில், சின்ன காமாட்சி அம்மன், பெரிய காமாட்சி அம்மன் மற்றும் பெரியசாமி கோவில்கள் உள்ளன. இங்கு, திருவிழா நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், கலெக்டர் ஆசியா மரியத்திடம், இரு தரப்பினரும், கடந்த, 8ல் மனு அளித்தனர். அதில், 'வழக்கத்திற்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள், கடந்த, 4ல், கூட்டம் போட்டு, மற்ற பிரிவினரை ஒதுக்கிவிட்டு தனியாக, திருவிழா நடத்த முடிவு செய்தனர். மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால், திருவிழாவை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில், வருவாய்த் துறையினர், அக்கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர், கொங்கலம்மன், விநாயக, பெரியகாமாட்சி அம்மன், சின்னகாமாட்சி அம்மன், பெரியசாமி ஆகிய கோவில்களுக்கு, 'சீல்' வைத்தனர். மேலும், கோவில் வீடு ஒன்றும் சீல் வைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை