கூடுதலாக13 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி: மின்துறை அமைச்சர் நம்பிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலாக13 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி: மின்துறை அமைச்சர் நம்பிக்கை

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்செங்கோடு: ''வரும், ஐந்தாண்டுகளில், கூடுதலாக, 13 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி இலக்கை தமிழகம் எட்டும்,'' என, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நம்பிக்கை தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, உப்புபாளையத்தில், துணை மின் நிலைய வளாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி, நிருபர்களிடம் கூறியதாவது: இந்தாண்டுக்குள், 125 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மூன்றாண்டுகளுக்குள், உற்பத்தி தொடங்கப்படும். வரும், ஐந்தாண்டுகளில், கூடுதலாக, 13 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை தமிழகம் எட்டும். மத்திய அரசு, தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டத்தில், 963 கோடி ரூபாய் அளித்துள்ளது. இதைக் கொண்டு, கிராமங்களில், 100 சதவீத மின்சாரம் அளிக்கும் வகையில், திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில், தேசிய அளவில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகத்திடமிருந்து, ஒரு லட்சம் கோடி கடன் பெற, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி, உடன்குடியில், 1,320 மெகாவாட் மின் உற்பத்திக்காக பெல் நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது. அப்பணிகளை துவங்க, முதல்கட்டமாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X