போலிகளை தடுக்க நடவடிக்கை: போலீசாருக்கு புதிய அடையாள அட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலிகளை தடுக்க நடவடிக்கை: போலீசாருக்கு புதிய அடையாள அட்டை

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நாமக்கல்: மோசடி பேர்வழிகள் போலி அடையாள அட்டையை தயார் செய்வதை தடுக்க, தமிழக போலீசாருக்கு, புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக போலீஸ்துறைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பயிற்சி பெறும்போது சன்னத்; சிறப்பு போலீசுக்கு, தளவாய்; மாவட்டத்துக்கு வந்த பிறகு, மாவட்ட எஸ்.பி., அல்லது கமிஷனர் கையெழுத்திட்டு, அடையாள அட்டை வழங்குகின்றனர். இதில், போலீஸ் முத்திரையுடன் பெயர், பதவி, முகவரி மட்டுமே இருக்கும். தற்போது, தமிழகம் முழுவதுமுள்ள போலீசாருக்கு, ஒரே மாதிரியான அடையாள அட்டை, டி.ஜி.பி., ராஜேந்திரன் கையெழுத்துடன், 1.2 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் முதல் பக்கம், போலீஸ் முத்திரையுடன் சம்பந்தப்பட்டவர் புகைப்படம், பெயர், பதவி, அடையாள எண் அச்சடிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி., என்ற ஹாலோகிராம் ஒட்டப்பட்டுள்ளது. பின்பக்கம், யூனிட் பெயர், ரத்த வகை, பிறந்த தேதி, ஓய்வு பெறும் தேதி, முகவரி, அங்க அடையாளம் ஆகியவை அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆன் லைனில் சரி பார்க்க வசதியாக, கம்ப்யூட்டர் பார்கோடு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 1,200 போலீசாருக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: இதுவரை, போலீசாருக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிதான் கையெழுத்திட்டு, அடையாள அட்டை வழங்கி வந்தார். சில மோசடி பேர்வழிகள் எளிதாக போலியான அடையாள அட்டையை தயார் செய்ய முடிந்தது. இதை தடுக்கும் நோக்குடன், மாநிலம் முழுவதும், ஒரே மாதிரியான அடையாள அட்டையை டி.ஜி.பி., வழங்கியுள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை