வரத்து அதிகரிப்பு: செங்கரும்பு ஜோடி ரூ.80 வரை விற்பனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பு: செங்கரும்பு ஜோடி ரூ.80 வரை விற்பனை

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில், ஒரு ஜோடி கரும்பு, 50 முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா, தமிழகம் மற்றுமின்றி, தமிழர்கள் வாழும், வெளிமாநிலம், வெளிநாடுகளில், நேற்று துவங்கியது. நேற்று, போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை கழித்து, சுத்தம் செய்து, ஆவாரம் பூ, பூலப்பூ மற்றும் வேப்பிலையை கொண்டு காப்பு கட்டினர். இன்று, வாசல் பொங்கல் வைத்து, சூரியனை வழிபடுகின்றனர். நாளை, மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்காக, மாவட்டம் முழுவதும் செங்கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை சூடுபிடித்துள்ளது. நாமக்கல் நகரில், மக்கள் வந்து செல்லும் இடங்களில், கரும்பு குவிக்கப்பட்டு, விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து, கரும்பு வியாபாரிகள் சிலர் கூறியதாவது: மழைப்பொழிவு இருந்ததால், கரும்பு விளைச்சல் அதிகரித்தது. ஈரோடு, பள்ளி பாளையம், கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி ஆகிய பகுதிகளில் கரும்பு அறுவடை செய்து, விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஒரு ஜோடி, 50 முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை