விபத்தை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர் பேக்குடன் பழநி பாதயாத்திரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர் பேக்குடன் பழநி பாதயாத்திரை

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: விபத்தை தடுக்க, ஒளிரும் ஸ்டிக்கர் பேக்குடன், குமாரபாளையம் பக்தர்கள் பழநி பாதயாத்திரை புறப்பட்டனர்.

குமாரபாளையத்தில், முருக பக்தர்கள் பெருமளவில் பழநி பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர். இரவில் செல்லும் போது, சில வாகன ஓட்டிகள் பக்தர்கள் மீது மோதி, விபத்து ஏற்படுகிறது. பலர் உயிரிழக்க, காயமடைய நேரிடுகிறது. இதை தடுக்கும் வகையில், பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பேக்கில், ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு செல்கின்றனர். இதனால், பெரும்பாலான விபத்துகள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: நாளிதழ்களில் வரும் செய்திகளில், பாத யாத்திரை செல்லும் பக்தர்கள், விபத்தில் சிக்கி பாதிப்பு என்று காண முடிகிறது. நாம் பாதிக்கப்பட்டால், நம் குடும்பத்தினர் என்ன செய்வார்கள் என்ற எண்ணத்தில், ஒளிரும் ஸ்டிக்கர் கொண்ட பேக்கை கொண்டு செல்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை