டூவீலர்கள் மோதல்: தொழிலாளி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர்கள் மோதல்: தொழிலாளி சாவு

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூரில், டூவீலர்கள் மோதிக்கொண்டதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தார். சேலம் மாவட்டம், இடைப்பாடி புதுப்பாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி சேகர், 26. நேற்று முன்தினம், கொடுமுடி அடுத்த நொய்யல், தனியார் கிரஷரில் வேலை பார்க்கிறார். பொங்கல் பண்டிகைக்காக, உறவினரான ராஜேந்திரன், 46, என்பவருடன் ஊருக்கு கிரக்ஸ் பைக்கில் சென்றார். மதியம், 3:45 மணியளவில், ப.வேலூர் தாலுகா அலுவலக பகுதியில் உள்ள டிவைடரை கடக்க முயன்ற, டி.வி.எஸ்., மொபட் மீது, பைக் மோதியது. மொபட்டில் வந்த, படமுடிபாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி மலையப்பன், 65, மற்றும் பைக்கில் வந்த இருவரும் காயமடைந்தனர். கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலையப்பன், நேற்று உயிரிழந்தார். மற்ற இருவரும், நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ப.வேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை