பொங்கல் பண்டிகையால் தக்காளி விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையால் தக்காளி விலை சரிவு

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொங்கலூர்;பொங்கல் பண்டிகை களை கட்டியுள்ளதால், பனியன் கம்பெனி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்ல துவங்கியுள்ளனர். இதனால், தக்காளி விலை சரிவடைந்துள்ளது.கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பொங்கலூர் பகுதியில் விளையும், 90 சதவிகித தக்காளி திருப்பூர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.பொங்கல் பண்டிகை வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளன. தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றால், திரும்பி வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். எனவே, மளிகை கடைக்காரர்கள், பழமுதிர் நிலையங்கள் தக்காளி கொள்முதல் செய்வதை குறைத்து விட்டனர். இதன் காரணமாக, தக்காளி மார்க்கெட்டில் தேக்கமடைந்து வருகிறது.சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு டிப்பர் (15 கிலோ) தக்காளி, 150 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, ஒரு டிப்பர், 100 ரூபாய்க்கு விலை போகிறது. நாளை முதல் ஒரு வாரத்திற்கு மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை