உதவித் தொகை கிடைக்காமல் முதியோர் பரிதவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவித் தொகை கிடைக்காமல் முதியோர் பரிதவிப்பு

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: குமாரபாளையம் தாலுகாவில், பெரும்பாலான பகுதிகளில், உதவித்தொகை கிடைக்காமல், முதியோர் பாதிக்கப்படுகின்றனர்.

முதியோர் உதவித் தொகை வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் வழங்கப்படுகிறது. சர்வர் பிரச்னை, காலதாமதம் இது போன்ற பிரச்னைகளால், அது பலருக்கும் கிடைக்காமல் உள்ளது. குமாரபாளையம் தாலுகாவில், ஒரு சில இடங்கள் தவிர, பெரும்பாலான இடங்களில், மூன்று மாதங்கள், இரண்டு மாதங்கள் வரை, உதவித் தொகை கிடைக்காததால், முதியோர் அவதிப்படுகின்றனர். இதன் மூலம்தான், பலரும் மருந்து, மாத்திரை வாங்க வேண்டிய சூழலில் உள்ளனர். பணம் கிடைக்காததால், உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த, 11ல் வெப்படை வி.ஏ.ஓ., அலுவலகத்தை, 60க்கு மேற்பட்ட முதியோர், முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் விசாரித்து, மாலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கினர். இதுபோல், தாலுகா முழுவதும் பிரச்னை உள்ளதால், அதிகாரிகள் விசாரித்து, மாதந்தோறும் உதவித் தொகை சரியாக கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை