"கதர், கிராமிய பொருள் வாங்குங்க'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"கதர், கிராமிய பொருள் வாங்குங்க'

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்:கதர் ஆடை, கிராமிய கைவினை பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு, கலெக்டர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு கிராம தொழில் வாரியத்தின் மூலம் கதர், பட்டு மற்றும் பாலிஸ்டர் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. முற்றிலும் இயற்கையானது; நீடித்து உழைக்கக்கூடியது, சுற்றுச்சூழலுக்கு இணக்கமானது. கதர் கிராம வாரியத்தால், பட்டு புடவைகள், அச்சிட்ட மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுடன் உற்பத்தி செய்யப்படுகிறது. தரம் வாய்ந்த பட்டு என்பதற்கான "சில்க் மார்க் லேபிள்' பெற்றுள்ளது. இதன் மூலம் பட்டு நெச வாளர் குடும்பங்களுக்கு, ஆண்டு முழுவதும் தொடர் ந்து வேலை வாய்ப்பும், வருவாயும் கிடைக்கிறது.அதேபோல், உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருளை கொண்டு, இயற்கையான மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் குளியல் சோப்பு, சலவை சோப்பு, தரை கழுவும் திரவம், மருத்துவ குணம்மிக்க தேன், பனை வெல்லம், பூஜை பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.கதர் பாலிஸ்டர் ரகங்கள் மற்றும் பட்டு ரகங்கள், தள்ளுபடியுடன் அரசுத்துறைகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு அலுவலக பணியாளர்களுக்கு, சுலப தவணையில் வழங்கப்படுகிறது. இதற்கான விற்பனை மையம், கலெக்டர் அலுவலகம் இரண்டாம் தளம், அறை எண், 216ல் செயல்படுகிறது.கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, பொதுமக்கள் கதர் மற்றும் கிராமப்பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை