புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாய்கள் தொல்லை தீரவில்லை: கரூர் அருகே, திருக்காம்புலியூர் பகுதியில், அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், அங்கு வசிக்கும் சிறுவர், சிறுமியர் சுதந்திரமாக விளையாட முடியவில்லை. இரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் ஓயாத சத்தத்தால், மக்கள் தூங்க முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் விரட்டுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

- எ.நிதிஷ், திருக்காம்புலியூர்.

வாகன சோதனையால் மக்கள் அவதி: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், காலை நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, அபராதம் வசூலிக்கின்றனர். இதனால், மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. இப்பகுதியில், பஸ் பாடி கட்டும் பட்டறைகள், தறிப்பட்டறைகளில், ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். தாமதம் ஆவதால் அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, காலை நேர வாகன சோதனையை தவிர்க்க வேண்டும்.

- எம்.நவநீத கிருஷ்ணன், வாங்கப்பாளையம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை