மாயனூர் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மாயனூரில் உள்ள அம்மா பூங்காவில், கரூர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கலைப் பண்பாட்டு சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய, பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக, கிருஷ்ணராயபுரம் யூனியன் சார்பில், சமத்துவ பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கலையரங்கத்தில், பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம் முதலான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம், யூனியன் கமிஷனர் புவனேஷ்வரி மற்றும் யூனியன் அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை