போலீசார் குடும்பத்தினர் பங்கேற்ற பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் குடும்பத்தினர் பங்கேற்ற பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, ஆயுதப்படை போலீசார் குடும்பத்தினர் பங்கேற்ற, விளையாட்டுப் போட்டிகள் கரூரில் நடந்தன.

கரூர், ஆயுதப்படை மைதானத்தில், எஸ்.பி., ராஜசேகரன் தலைமையில், போலீசார் குடும்பத்தினர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா, நேற்று முன் தினம் நடந்தது. அதன்பின், போலீசார் குடும்பத்தினருக்கான இரண்டு நாள் விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. பெண்கள், பெரியவர் மற்றும் குழந்தைகள் இதில் பங்கேற்றனர். வாலிபால், கயிறு இழுத்தல், குழந்தைகள் பங்கேற்ற பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தல் என பலவகையான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் குடும்ப உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை