பள்ளிகளில் பொங்கல் விழா கோலாகலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் பொங்கல் விழா கோலாகலம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திருப்பூர்:திருப்பூர் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில், பொங்கல் விழா, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, பள்ளி முதல்வர் தலைமை வகித்தார். பெற்றோர்கள், மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, சமத்துவ பொங்கல் வைத்து, விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பெற்றோர் கள், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.· திருப்பூர், விஜயாபுரம், பிரைட் பப்ளிக் பள்ளியில் நடந்த விழாவில், பொங்கல் வைத்து இறைவனுக்கு படைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. மாணவ, மாணவியர் வண்ண கோலமிட்டு, கும்மியடித்து, ஆடி பாடி மகிழ்ந் தனர். மாணவர்களுக்கு, "கயிறு இழுத்தல் போட்டி' நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை யில் பங்கேற்றனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
·பெருமாநல்லூர், கே.எம்.சி., - சி.பி. எஸ்.சி., பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தலைவர் சண்முகம், தாளாளர் மனோகரன், பள்ளி முதல்வர் மேரி எமரென்ஸியா முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பொங்கல் வைத்து, இறைவனுக்கு படைத்து, வழிபட்டனர். அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. கோலப் போட்டி, உறியடி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.
· திருமுருகன் பூண்டி ரிங் ரோடு, செட்டிபாளையத் தில் உள்ள கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கயிறு இழுத்தல், தண்ணீர் பந்து விளையாடுதல், உறியடித்தல், கும்மியடித்தல், உள்ளிட்ட போட்டிகள், பெற்றோர்களுக்கு நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ரமேஷ், செயலாளர் குமாரவேல் பேசினர். பள்ளி முதல்வர் சாந்தி, துணை முதல்வர் ஆனந்த், ஒருங் கிணைப்பாளர் சரண்யா <உட்பட பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழாவில் திரளாக பங்கேற்றனர்.
· கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த விழா வுக்கு, தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். வண்ண கோல மிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து, மாவிலை தோரணம் கட்டி, புதிய பானையில் பொங்கல் வைத்து, கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். உழவர் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் எடுத்து கூறினர். "பொங்கலோ பொங்கல்' என்று குலவையிட்டு, மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.· பல்லடம் அரு@க வதம்பச்@Œரியில் உள்ள எஸ்.சி.எம்., பள்ளியில், பொங்கல் விழா, பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது. ஊராட்சி செயலர் சுகுமாரன் விழாவை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் மகாலிங்கம் முன்னிலை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியை தேவபாலா வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, மற்றும் ரூட்ஸ் நிறுவன மேலாளர் இயக்குனர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.விழாவில், பள்ளி மாணவ மாணவிரின் அணிவகுப்பு மரியாதை, விளையாட்டு போட்டிகள் மற்றும் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார். முன்னதாக, பள்ளி வளாகத்தில், பொங்கல் வைக்கப்பட்டது.· பொங்கலூரில் உள்ள சுப்பா நாயுடு வெங்கிட்டம்மாள் மெட்ரிக் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில், புதுப்பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைத் தனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கான விளை யாட்டு போட்டி, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை