கடையில் தரமற்ற உணவு பொருள்: பாதுகாப்பு அதிகாரிகள் பாராமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடையில் தரமற்ற உணவு பொருள்: பாதுகாப்பு அதிகாரிகள் பாராமுகம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்:உணவு பாதுகாப்புத்துறையின் தொடர் கண்காணிப்பு இல்லாததால், எண்ணெயில் பொரித்த "சிப்ஸ்' உள்ளிட்ட, பாக்கெட் தின்பண்டங்கள், விதிமுறைகளை மதிக்காமல் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்களின் சுகாதார நலன்கருதி, உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. உணவு பொருள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. காலாவதியாகும் தேதி விவரம், உற்பத்தி செய்த தேதி, எடையளவு போன்ற விவரங்கள், பாக்கெட்டுகளில் இடம் பெற வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையினர், அவ்வப்போது ஆய்வு நடத்தி, தரமான உணவு பொருள் விற்பனை செய்வதை உறுதிசெய்து வந்தனர்.திருப்பூர் நகரப்பகுதி, அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி, சாமளாபுரம் பேரூராட்சி பகுதிகளில், உணவு பாதுகாப்புத்துறை செயல்படாததால், மீண்டும் தரம் குறைவான உணவு பொருட்களை வாங்கி, மக்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பெரிய ஓட்டல்கள், "டிபார்ட்மென்ட்' ஸ்டோர்களில் அடிக்கடி ஆய்வுக்கு செல்லும் உணவு பாதுகாப்புத்துறையினர், மக்கள் அதிகம் பயன்படுத் தும், ஓட்டல், பேக்கரிகளில் விற்கப்படும் உணவு பண்டங்களையும் சோதனை செய்து, ஒழுங்கு படுத்த வேண்டும்.அவிநாசி பேரூராட்சி பகுதியில், வீடுகளில் தயாரிக்கப்படும் உணவு பண்டங்கள், எவ்வித விவரமும் இல்லாமல் "பேக் கிங்' செய்து விற்கப்படுகின்றன. இதேபோல் மங்கலம், பெருமாநல்லூர், முதலிபாளையம் சுற்றுப்பகுதிகளிலும், இதேபோல் தர மில்லாத உணவு பொருள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. உணவு பாதுகாப்புத்துறையும் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மக்களின் ஆரோக் யத்தை கருத்தில்கொண்டு, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக அமல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை