தீ விபத்து தடுப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்து தடுப்பு பயிற்சி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் ;மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்புத்துறை சார்பில், தீ விபத்து தடுப்பு குறித்த மாதிரி பயிற்சி அளிக்கப்பட்டது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த பயிற்சியை, டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி துவக்கி வைத்தார். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு, தீ விபத்தை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர், தீ விபத்தின் வகைகள், தடுப்பு நடவடிக்கை, உயிரிழப்பை தடுப்பது, பொருட்கள் சேதமாவதை தடுப்பது, முதலுதவி உள்ளிட் டவை குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.
வீட்டில் உள்ள காஸ் அடுப்பு, "டியூப்' பராமரிப்பு மற்றும் ஓராண்டு இடைவெளியில் "டியூப்' மாற்றுவது குறித்தும் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமைத் துறை தாசில்தார் ரமேஷ், தீயணைப்பு அலுவலர்கள் சுரேஷ் சந்திரகாந்த், சண்முகம், சுரேஷ்குமார் உட்பட, அரசு அலுவலர்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை