பொங்கல் எதிரொலி: கரூர் உழவர் சந்தையில், 25 டன் காய்கறிகள் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் எதிரொலி: கரூர் உழவர் சந்தையில், 25 டன் காய்கறிகள் விற்பனை

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: பொங்கல் திருவிழாவையொட்டி, கரூர் உழவர் சந்தையில், ஒரே நாளில், 25 டன் காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன.

பொங்கல் திருவிழாவையொட்டி, நேற்று காலை, கரூர் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று சூரிய பொங்கல், நாளை மாட்டுப் பொங்கல், நாளை மறுநாள் காணும் பொங்கல் கொண்டாட, ஏராளமான மக்கள் காய்கறிகள், பழங்கள், மஞ்சள் கொத்து, கரும்பு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்க குவிந்தனர். வரத்து அதிகமாக இருந்ததால், காய்கறி விலை குறைவாகவே காணப்பட்டது. தேங்காய் ஒன்று, 10 முதல், 18 ரூபாய் வரை, மஞ்சள் கொத்து ஒரு ஜோடி, 30 முதல், 40 ரூபாய் வரை, வாழைப்பழம் ரகத்தை பொறுத்து ஒரு சீப், 30 முதல், 60 ரூபாய் வரை, தக்காளி ஒரு கிலோ, 10 ரூபாய், வெண்டைக்காய், 20, புடலை, 15, பீர்க்கங்காய், 20, அவரைக்காய், 30, பாகற்காய், 20, முள்ளங்கி, 15, பீன்ஸ், 30, கேரட், 30 மற்றும் முட்டைகோஸ் ஒரு கிலோ, 30 ரூபாய் என விற்றது. வழக்கமாக கரூர் உழவர் சந்தையில், 20 டன் காய்கறிகள் விற்பனையாகும். நேற்று, 25 டன் காய்கறிகள் விற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை