மாவட்ட எல்லையில் கிராவல் மண், செம்மண் கடத்தல் ஜோர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையில் கிராவல் மண், செம்மண் கடத்தல் ஜோர்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குளித்தலை: நங்கவரம் பகுதியில், அதிகாரிகள் ஆதரவுடன் கிராவல் மண், செம்மண் கடத்தல் தொடர்கிறது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நங்கவரம் வருவாய் கிராமமான ஆர்.டி., மலை, ஆர்ச்சம்பட்டி பஞ்சாயத்து பகுதிகள், கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ளன. இங்கு, கிராவல் மண், செம்மண் வெட்டி எடுத்து, திருச்சி மாவட்டத்திற்கு கடத்தப்படுகிறது. கிராவல் மண், செம்மண் கடத்தல்காரர்கள், குடிசைத்தொழில் போல் இதை செய்து வருகின்றனர். கடத்தல்காரர்கள், வருவாய்துறை அதிகாரிகளை உரிய முறையில் கவனித்து விடுவதால், அவர்களும் இது குறித்து கண்டு கொள்வதில்லை. இதனால், மண் கடத்தல் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஜோராக நடக்கிறது. இதேபோல், தோகைமலை பகுதியில், கிராவல் மண், செம்மண் மற்றும் மணல் கடத்தல் தடையில்லாமல் நடக்கிறது. கரூர் மாவட்ட கலெக்டர், மணல் மற்றும் கிராவல், செம்மண் கடத்தலைக் கண்டுபிடிக்க, தனிக்குழு அமைத்தார். ஆனாலும் இதனால் எந்தப் பயனும் இல்லை என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் (பொறுப்பு) பெருமாள் கூறியதாவது: குளித்தலை தாலுகா பகுதியில், மூர்த்தி என்பவர் மட்டும் முறையாக அனுமதி பெற்று, கிராவல் மண் எடுத்து வருகிறார். மற்றவர்கள் மண் கடத்தலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


இதுகுறித்து தாசில்தார் கலியமூர்த்தி கூறியதாவது: நங்கவரம் பகுதியில், கிராவல் மண், செம்மண் கடத்துவது குறித்து நீங்கள் சொல்லித் தான் தெரியவருகிறது. கிராவல் மண், செம்மண் மற்றும் மணல் கடத்தல் கண்காணிப்பு பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X