புகையில்லா பொங்கல் விழா: விழிப்புணர்வு பேரணி; கோலப்போட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகையில்லா பொங்கல் விழா: விழிப்புணர்வு பேரணி; கோலப்போட்டி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: மருதூரில், புகையில்லா பொங்கல் விழா கோலப்போட்டி நடந்தது. குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ்சாயத்து கூட்ட அரங்கில், புகையில்லா பொங்கல் குறித்து, விழிப்புணர்வு முகாம், இ.ஓ., சேகர் தலைமையில் நடந்தது. இதில், பள்ளி மாணவ, மாணவியர், சுகாதார பணியாளர்கள் பங்கேற்ற புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதையடுத்து, டவுன் பஞ்., அலுவலகம் முன், கோலப்போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு இ.ஓ., சேகர் பரிசு வழங்கினார். இதேபோல், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில், இ.ஓ., சேகர் தலைமையில், புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு மற்றும் கோலப்போட்டி நடந்தது. இதில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை